Showing posts with label 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள். Show all posts
Showing posts with label 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள். Show all posts

Wednesday, August 26, 2020

மீனம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மீனம்:

செப்டம்பர் மாதம் உங்களுக்கு மிகவும் நல்ல மாதம்தான். வரப்போகும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மீனத்திற்கு மிக நல்லபலன்கள் நடக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். குறிப்பாக பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். எவரிடமும் கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். 

மகரம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடியப் போகும் காலம் இது. மனதைத் தளர விடவேண்டாம். அடுத்து நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் குரு ராசியில் இருக்கும் சனியுடன் இணைந்து சனியை சுபத்துவப் படுத்தப் போவதால் இனிமேல் ஏழரைச் சனியால் பெரிய தொந்தரவுகள் இருக்காது. உங்களில் உத்திராடம் நட்சத்திரக் காரர்களுக்கு ஜென்ம நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கும் சனி நவம்பரில் விலகும் என்பதால் இந்த வருடத்தோடு உங்கள் பிரச்னைகள் அத்தனையும் ஒழியும். மகரத்திற்கு  நல்ல காலம் ஆரம்பிக்கும் மாதம் இது. இந்த மாதம் பாக்கியாதிபதி புதன் உச்ச நிலை   அடைவதால் தொழில் மூலம் வருமானங்கள் இருக்கும். எனவே எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. செலவுக்கேற்ற பணவரவு இருக்கும். கவலைப்படத் தேவையில்லாத மாதம் இது.

தனுசு: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு:

மாதம் முழுவதும் ராசிநாதன் குரு ராசியில் ஆட்சி நிலையில், நண்பர் கேதுவுடன்  யோகம் தரும் அமைப்பில் இருக்கிறார். யோகாதிபதிகள் செவ்வாய், சூரியன் ஐந்து ஒன்பதில் ஆட்சி நிலையில் குருவின் பார்வையில் இருப்பதும் உங்களுக்கு நன்மை தரும் அமைப்பு என்பதால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு யோகம் தரும் மாதம்தான். அடுத்து  நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் குருபகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து, தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்தப் போவதால் இனிமேல் தனுசுவினருக்கு  வேலை, தொழில் அமைப்பில் எவ்வித சிக்கல்களும் வரப் போவது இல்லை. தனுசின் கஷ்டங்கள் அனைத்தும் முடிந்து விட்டது.

விருச்சிகம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

விருச்சிகம்:

விருச்சிக நாதன் செவ்வாய் ஆறாம் வீட்டில் இருப்பதால் இந்த மாதம் சிலவிஷயங்கள் உங்கள் கையை மீறி நடக்கும்.  ஆனாலும் ராசிநாதன் ஆட்சி வலு பெறுவதால் அனைத்தும் முடிவில் உங்களுக்கு நன்மையாக முடியும். உங்களுக்கு இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் ராசிநாதனே ஆறாம் அதிபதியும் ஆவதால் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. புதனின் உச்ச நிலையால் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகி போவதற்கு வாய்ப்பு இருப்பதால் எங்கும், எதிலும் நிதானத்துடன் இருங்கள். 

துலாம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

துலாம்:

துலாம் நாதன் புதன் மாத ஆரம்பத்தில் தொழில் ஸ்தானத்திலும், பிறகு லாப  நிலையிலும் இருக்கப் போவதால் இது துலாமிற்கு  நன்மைகள் தரும் மாதமாக இருக்கும். ஒரு சிறப்புபலனாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக இப்போது கிடைக்கும். பிரிந்து போன ஒருவர் இப்போது சேருவார். ராசிநாதனின் சுப  வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் குணமடைவீர்கள். மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனி விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். 

கன்னி: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கன்னி: 

செப்டம்பர் மாதம் பாதிநாள் வரை கன்னி நாதன் புதன் அதிநட்பு நிலையில் நண்பர் சூரியனுடனும்  அதன்பின் ராசியில் உச்ச நிலையிலும் இருக்கிறார். ராசிநாதன் வலுவாக இருப்பதால் உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும் சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதுத் தொழில் தொடங்கலாம்.  செய்யும் தொழில் சிறப்பாக நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். நான்கில் குரு இருப்பதால் வீடு, வாகனம், தாயார் போன்ற விஷயங்களில் நன்மைகள் நடக்கும். 

சிம்மம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

சிம்மம்:

சிம்ம ராசிக்கு அனைத்து யோகக் கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் செப்டம்பர் மாதம்  உங்களுக்கு “பருத்தி புடைவையாய்க் காய்த்தது” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து விஷயங்களும் அதிக முயற்சி இன்றி நடக்கும். சூரியன் ராசியில் ஆட்சி பெற்று, ராசியை குரு பார்ப்பதால் மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்கள்தான். முப்பது வயதுகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை, குடும்பம், தொழில் போன்ற அனைத்திலும் செட்டில் ஆக வேண்டிய காலகட்டம் என்பதால் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு. 

கடகம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கடகம்:

கடக நாதன் சந்திரன் மாத ஆரம்பத்தில் வலிமை பெற்று வலம் வருவதால் இது உங்களுக்கு நல்ல திருப்பங்களையும் சாதகமான பலன்களையும் தருகின்ற மாதமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்து, கௌரவம் நன்றாக இருக்கும் காலம் இது. ராசிநாதன் வலுப்பதால் உங்கள் எண்ணங்கள் செயலாகி நினைத்தது நடக்கும். சொன்னது பலிக்கும். மாதம் முழுவதும் செவ்வாயும், சூரியனும் வலுவாக இருப்பதால் பணவரவும் சிறப்பாக இருக்கும். குருவும்  தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களில் இளைய பருவத்தினர் உங்களின் எதிர்கால நல்வாழ்க்கைக்கான அடிப்படைகளை இப்போது அமைத்துக் கொள்வீர்கள்.

மிதுனம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மிதுனம்:

மாத முற்பகுதியில் ராசிநாதன் புதன் மூன்றில் இருந்தாலும் அதிநட்பு நிலையில் நண்பர் சூரியனுடன் இருப்பதால், இந்த மாதம் முழுதும் மிதுனத்திற்கு நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் நடக்கும். ஒரு குறிப்பிட்ட நிலையாக உங்களுக்குப் பிடிக்காத ஒருவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு நீங்கள் போராட வேண்டியிருக்கும். பிடிக்காத விஷயங்களும் இப்போது நடக்கும். இளைய பருவத்தினர் தற்போது செய்யும் வேலையை விடவே விடாதீர்கள். ஆனால் அஷ்டமச் சனி விட வைத்து விடுவார். மிதுன ராசி இளைஞர்களுக்கு இப்போது போராட்ட காலம். எதுவும் முயற்சி செய்தால்தான் கிடைக்கும். சோம்பலின்றி சுறுசுறுப்பாக செயலாற்றினால் அனைத்தையும் ஜெயிக்கலாம் என்பது உறுதி.

ரிஷபம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களின் உற்சாகமும், திறந்தமனதும், நேர்மையான போக்கும், எதையும் அலட்சியமாக சமாளிக்கும் உறுதியும் இந்த மாதம் வெளிப்படும். ரிஷபத்திற்கு இனி கிரகநிலைகள் நன்றாக அமைய இருக்கின்றன. நல்ல சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வந்து கதவை தட்டும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இப்போது நீங்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். அடுத்து நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் குரு ஒன்பதாமிடத்திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்க்கப் போவதால் உங்களின் நல்லநேரம் இந்த மாதத்திலிருந்தே ஆரம்பமாகும். ராசிநாதன் சுக்கிரனும் பலம் பெறுவதால் மாதம் முழுவதும் உங்களிடம் சரளமான பணப்புழக்கம் இருக்கும். எந்தப் பிரச்னையும் எல்லை மீறி போகாது. அனைத்தையும் உங்களால் சமாளிக்க முடியும். 

மேஷம்: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

ஒன்பதாமிட குரு ராசியைப் பார்த்து சுபப்படுத்துவதால் கஷ்டங்கள் விலகும் மாதம் இது. ராசிநாதன் செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதாலும் உங்களுக்கு இனி பிரச்னைகள் எதுவும் இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.