கைப்பேசி : +91 9768 99 8888
சிம்மம்:
சிம்ம ராசிக்கு அனைத்து யோகக் கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு “பருத்தி புடைவையாய்க் காய்த்தது” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து விஷயங்களும் அதிக முயற்சி இன்றி நடக்கும். சூரியன் ராசியில் ஆட்சி பெற்று, ராசியை குரு பார்ப்பதால் மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்கள்தான். முப்பது வயதுகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை, குடும்பம், தொழில் போன்ற அனைத்திலும் செட்டில் ஆக வேண்டிய காலகட்டம் என்பதால் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு.
இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. உங்களில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் அமையும். செலவுகளும் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும் என்பதால் வீடு கலகலப்பும், சிரிப்புமாக இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும் ஆனால் சேமிக்கத்தான் முடியாது. அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.
கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்பத்தாரோடு சேர்ந்து மகிழ்வுடன் இருப்பீர்கள். சில புதிய அறிமுகங்கள் இப்போது உண்டு. இளைய பருவத்தினருக்கு பொருளாதார நிலைமை மேம்படும். எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். சிலருக்கு ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும் முதல் திருமணம் கசப்பில் முடிந்து விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான சம்பவங்கள் இருக்கும். ரியல்எஸ்டேட், புரமோட்டர்கள், மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.
5,6,7,11,12,13,19,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 3 -ந்தேதி பகல் 2.14 மணி முதல் 6-ந்தேதி அதிகாலை 2.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் பெரிய சங்கடங்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் ஆரம்பங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
Amazing predictions you shared. I bookmark your blog for such kind of informative post. Searching for Best Astrologer in Bangalore People trust on Sai Balaji Anugraha
ReplyDeleteBest Astrologer Bangalore