ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
முன்னாள் பிரதமர் திரு.
மன்மோகன் சிங் அவர்களின் ஜாதக விளக்கத்தில் உங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பதை
தொலைபேசி அழைப்புகள் மற்றும் பின்னூட்டங்களிலிருந்து அறிகிறேன். குறிப்பாக நான் அடிக்கடி குறிப்பிடும் ராஜயோகம் எதுவும் மன்மோகன்
உள்ளிட்ட சில உதாரண ஜாதகங்களில் இல்லையே என்றும் சிலர் கேட்டிருக்கிறீர்கள்.
ஜோதிடம் என்பது பலவிதமான விதிகளை கொண்டது. இங்கே மூலக்கருத்து மட்டுமே நிரந்தரமானது. அதை
மட்டும்தான் நாம் எடுத்துக் கொள்ள
வேண்டும். மேம்போக்காக பார்க்கும்போது சில ஜாதகங்களில்
யோகங்கள் இருக்கலாம், அல்லது
இல்லாமல் இருக்கலாம். சாதித்துக் காட்டிய உண்மையான ராஜயோக ஜாதகங்களில், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அரச யோக அமைப்புகள் அனைத்தும் நமக்குத் தெரிய வேண்டும் என்கின்ற
அவசியமில்லை.