Showing posts with label S007-சனியின் சூட்சுமங்கள். Show all posts
Showing posts with label S007-சனியின் சூட்சுமங்கள். Show all posts

Friday, January 27, 2017

அதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..?


இன்று ஜனவரி மாதம் 27-ந்தேதி சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசுக்கு அதிசாரம் என்ற முறைப்படி மாற இருக்கிறார்.

ஜூன் மாதம் 20 ம் தேதிவரை அவர் தனுசு ராசியிலேயே இருப்பார். பின் வக்கிர நிலையில் மீண்டும் ஜூன் 21 ம்தேதி விருச்சிகத்திற்கு வந்து, சில மாதங்களுக்குப் பிறகு விருச்சிகத்திலிருந்து வெளியேறி அக்டோபர் மாதம் 26 ம் தேதி இரவு நிரந்தரமாக தனுசுக்கு பெயர்ச்சியாவார்.

Saturday, January 9, 2016

குரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்? C- 035

வேத ஜோதிடத்தின் சில மூலவிஷயங்கள் ஞானிகளைத் தவிர வேறு யாரும் அறியாதவை. உதாரணமாக நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்வெளி 360 டிகிரியாகப் பாவிக்கப்பட்டு சமமான பனிரெண்டு ராசியாக ஏன் பிரிக்கப்பட்டது? இதை பதினெட்டு ராசியாக ஏன் பிரித்திருக்கக் கூடாது? யாருக்கும் தெரியாது. இது கேள்விக்கு அப்பாற்பட்ட மூலவிஷயம்.

Wednesday, December 17, 2014

சனிபகவானைக் கும்பிடலாமா?

அஷ்டமச்சனி உங்களுக்கு ஆரம்பிக்கப் போகிறது என்றால் ஆடிப்போகாத ஆளே இல்லை. மனித வாழ்வில் கிரகங்களின் தாக்கத்தை நம்பும் ஒவ்வொருவருக்கும் சனிப்பெயர்ச்சி என்றாலே ஆர்வமும் பயமும் தரும் விஷயம்தான்.

வருடக்கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றில் சனிப் பெயர்ச்சிக்கே நாம் எல்லோரும் அதிக முக்கியத்துவம் தருகிறோம். அதற்கு காரணம் சனிபகவான் மட்டுமே ஒன்பது கிரகங்களில் நமக்கு கொடிய துன்பத்தைத் தருபவர் என்பதினால்தான்.

பரம்பொருளால் நமக்கு அருளப்பட்டவை அனைத்தும் இருவேறு எதிரெதிர் நிலைகளைக் கொண்டவைதான். ஆண்-பெண் பகல்-இரவு நன்மை-தீமை என்பதைப் போல கிரகங்களிலும் சுபகிரகம் அசுபகிரகம் என இருக்கும் இரண்டு பிரிவுகளில் முதன்மையான பாபகிரகம் சனிபகவான்.

Tuesday, July 16, 2013

ஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...!


ஏழரைச்சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும்.

சனி பகவான் சிவபெருமானை அணுகி “பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன்” என்றதும் (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அவர் “உன்னையும், சர்வ உலகத்தையும் படைத்த என்னை நீ பிடிக்க முடியுமா? ” என்றதற்கு “எவரும் எனக்கு விதிவிலக்கல்ல” என்று சனிபகவான் கூற..

சனி கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஈசன் பூமிக்கு வந்து ஒரு சாக்கடையின் அடியில் ஏழரை நிமிடம் ஒளிந்து கொண்டு, பிறகு வெளிவந்து எகத்தாளமாய் “பார்த்தாயா...என்னை உன்னால் பிடிக்க முடியவில்லை” என்றதும்,