ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
மேஷம்:
ஒன்பதாமிட குரு ராசியைப் பார்த்து சுபப்படுத்துவதால் கஷ்டங்கள் விலகும் மாதம் இது. ராசிநாதன் செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதாலும் உங்களுக்கு இனி பிரச்னைகள் எதுவும் இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.
வியாபாரிகளுக்கு மந்த நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். இதுவரை வராமல் இருந்த பாக்கி இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வரும்.
குழந்தைகள் விஷயத்தில் செலவுகள் வரும். பெண் குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. பத்தாமிடம் வலுப் பெற்று இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் வரவுகளும் ஆதாயங்களும் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி வரும். நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்வகையில் மனக்கசப்புக்கள் அல்லது பூர்வீகச் சொத்து விஷயத்தில் இடையூறுகள் இருக்கும். சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது.
7,8,9,10,11,15,16,17,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 21 -ந்தேதி மதியம் 3.16 மணி முதல் 23 -ந்தேதி மாலை 6.25 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள் அவசரமான மாற்றங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment