Wednesday, August 26, 2020

தனுசு: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு:

மாதம் முழுவதும் ராசிநாதன் குரு ராசியில் ஆட்சி நிலையில், நண்பர் கேதுவுடன்  யோகம் தரும் அமைப்பில் இருக்கிறார். யோகாதிபதிகள் செவ்வாய், சூரியன் ஐந்து ஒன்பதில் ஆட்சி நிலையில் குருவின் பார்வையில் இருப்பதும் உங்களுக்கு நன்மை தரும் அமைப்பு என்பதால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு யோகம் தரும் மாதம்தான். அடுத்து  நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் குருபகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து, தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்தப் போவதால் இனிமேல் தனுசுவினருக்கு  வேலை, தொழில் அமைப்பில் எவ்வித சிக்கல்களும் வரப் போவது இல்லை. தனுசின் கஷ்டங்கள் அனைத்தும் முடிந்து விட்டது.

நான்காமிடம் வலுப் பெறுவதால் இந்த மாதம் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும். பாக்கியாதிபதி சூரியன் மிகவும் வலுவாக அவருடைய நண்பரான புதனுடன் இருப்பதால் எதிர்பாராத பண வரவு இருக்கும். யார் வீட்டுப் பணமானாலும் பாக்கெட்டில் புரண்டு கொண்டே இருக்கும். பணத் தட்டுப்பாடு இனிமேல் இருக்காது. வேலை தொழில் விஷயங்களில் இருந்து வந்த கலக்கமான, பதட்டமான சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தந்தைவழி தொழில் செய்பவர்கள் போன்றவருக்கு இது நன்மைகள் தரும் மாதமாக இருக்கும்.

உங்களில் சிலருக்கு இப்போது வெளிநாடு, வெளிமாநிலம் என தூரப் பிரயாணங்கள் உண்டாகும். சுக்கிர நிலையால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு  சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. ஏழரைச்சனி இன்னும் இருப்பதால் வரும் ஒன்பது வாரங்களுக்கு பத்தொன்பது மிளகை முடிச்சாக கட்டி அந்த முடிச்சை புது மண் அகல்விளக்கில் இட்டு நல்லெண்ணெய் ஊற்றி காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் ஏற்றுவது நல்லது. சனி இனிமேல் கெடுதல்கள் செய்ய மாட்டார். யோகாதிபதி செவ்வாய் ஐந்தில் ஆட்சி வீட்டில் இருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் இந்தமாதம் தங்களின் ஜென்மநட்சத்திர தினத்திலோ, அல்லது ஒரு செவ்வாய்கிழமையிலோ தமிழ்வேளாம் குமரக்கடவுளின் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மைகளைத் தரும்.

1,2,3,5,7,12,13,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 -ந்தேதி காலை 10.36 மணி முதல் 15 -ந்தேதி மாலை 2.25 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. சந்திரன் வலிமை இழப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.   

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment