கைப்பேசி : +91 9768 99 8888
ராசியின் யோகாதிபதிகள் சுக்கிரனுக்கும், புதனுக்கும் ஒருசேர குருவின் பார்வை இருப்பதால், கடந்த காலங்களில் உடலிலும், மனதிலும் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த மகர ராசிக்காரர்கள் இனிமேல் உற்சாகம் அடைவீர்கள். மகரத்தினர் இனிமேல் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுபட தொடங்குவீர்கள். ஐந்திற்குடைய சுக்கிரன் வலுத்தாலும், அவர் அந்த வீட்டிற்கு ஆறில் மறைவதால் பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் பிரச்னையை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்
ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரத் தொடங்கும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு நீங்கள்தான் உதவி செய்யும்படி இருக்கும். என்னதான் அவர்களுக்கு செய்தாலும் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வதையும் கேட்க வேண்டியிருக்கும். யோகாதிபதிகள் வலுப் பெறுவதால் இந்த மாதம் உங்களுக்கு நல்லமாதமே.
1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி இரவு 9:36 முதல் 6-ம் தேதி காலை 10:22 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் சொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

No comments :
Post a Comment