Tuesday, November 28, 2023

கும்பம்: 2023 டிசம்பர் மாத ராசி பலன்கள்

 
கும்பம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் சூரியனும், செவ்வாயும் பத்தாம் இடத்தில் நல்ல நிலையில் இருந்தாலும், அவர்கள் இருவரும் ராசியில் இருக்கும் சனியால் பார்க்கப் படுவது, டிசம்பர் மாதம் முழுவதும் கும்ப ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபார, விவசாய நிலைகளில், தேவையற்ற செலவுகளும், வீண் விரயங்களும் இருக்கும் என்பதை காட்டுகிறது. அதேநேரத்தில் யோகாதிபதி புதன் லாப வீட்டில் அமர்ந்து, தன்னுடைய வீடான ஐந்தை பார்ப்பதாலும், பாக்கியாதிபதி சுக்கிரன் ஒன்பதிலேயே ஆட்சி பெற்றிருப்பதாலும், செலவுகளுக்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் கும்பத்தினர் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் மாதமாக இது இருக்கும். 

சுக்கிரன் அவரின் பாக்ய வீட்டில் இருப்பதால் இது உங்களுக்கு  அதிர்ஷ்டமுள்ள மாதம்தான். குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம் என்று சொல்லுவேன். 11 இல் புதன் இருப்பதும் கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன்களை நினைத்து கலக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தரும் மாதம் இது. சிலருக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு.  குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். 

சகோதர உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக் குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். 

2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம்தேதி காலை 10.22 முதல் 8-ம் தேதி இரவு 9.53 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment