கைப்பேசி : +91 9768 99 8888
ஒரு குறிப்பிட்ட பலனாக, மூன்றில் உள்ள சனியின் பார்வை, விரயத்தில் உள்ள யோகாதிபதி செவ்வாயின் மேல் பதிவதால் ஒரு கருப்பு நிறமுள்ள வேற்று இனக்காரர் அல்லது காலை விந்தி விந்தி நடப்பவரால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை கடைப்பிடிப்பது நல்லது. குருபகவான் ராசியைப் பார்ப்பதால் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும்.
நோய்கள் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதிக முயற்சி இல்லாமலே சுப காரியங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனி முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவர். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்டவர்கள் இனிமேல் அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள். அலுவலகங்களில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.
5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி காலை 10.12 மணி முதல் 3-ம் தேதி இரவு 9.36 வரையும், மாத பிற்பகுதியில் 28-ம் தேதி மாலை 6.38 முதல் 31-ம் தேதி அதிகாலை 5:42 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

No comments :
Post a Comment