Tuesday, November 28, 2023

விருச்சிகம்: 2023 டிசம்பர் மாத ராசி பலன்கள்

 
விருச்சிகம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியில் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது குறைகள் சொல்ல முடியாத மாதமாக அமையும். மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ஜீவனாதிபதி சூரியனும் நல்ல நிலையில் இருகக்கிறார். டிசம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் எதுவும் இல்லாத நல்ல மாதம் தான். தான ஸ்தானத்தில் புதனும், விரயத்தில் சுக்கிரனும் குருவின் பார்வையில் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை பெறுவீர்கள். குறிப்பாக சுக்கிர தசை, சுக்கிர புக்தி நடப்பவர்களுக்கு இந்த டிசம்பர் மாதத்தில் எதிர்பாராத பண வரவு இருக்கும். 

மாத ஆரம்பத்தில் ராசியில் சூரியன், செவ்வாய் இணைந்திருப்பதால், மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சாதாரண சிறு விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. கடுமையான கோபத்தை தரும் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார் என்பதை இளைய பருவத்தினர் நினைவில் கொள்வது நல்லது. உங்களில் கேட்டை நட்சத்திரத்தினருக்கு வயதுக்கேற்ற வகையில் வேலை, காதல், நட்பு போன்றவற்றில் ஏமாற்றங்கள் இருக்கும். கவனம்.

தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தந்தையால் மருத்துவச் செலவுகள் இருக்கும். தந்தையால் விரையம், தந்தையே விரையம் என்ற கிரகநிலை உள்ளது. கவனம். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு சம்மந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்கள் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 26 ம் தேதி காலை 9:57 முதல் 28 ம் தேதி மாலை 6:38 வரை, சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் ஓரளவு ஒளியுள்ள நிலையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment