கைப்பேசி : +91 9768 99 8888
குருபகவான்
ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும்
இருக்கும். துலாத்திற்கு மிகவும் நன்மை தரும் அமைப்பு இது. மனைவி மற்றும் பங்குதாரர்கள்
வழியில் லாபங்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் நன்மைகள் உண்டு. கலைஞர்கள்,
விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது நல்ல மாதம். யோகாதிபதிகள் புதனும்,
சனியும் வலுவாக உள்ளதால் திறமையை வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை
முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில்
பணிபுரிபவருக்கு நன்மைகள் இருக்கும்.
கூட்டுத்
தொழிலில் கசப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பங்கு பிரிப்பது, தனிக்குடித்தனம்
போவது போன்றவைகள் இப்போது கூடாது. தேவையின்றி எவருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
சகோதரர்கள், பங்காளி போன்ற உறவினர்களிடம் விரோதம் வரும் மாதம் இது. அலுவலகத்திலும்
உங்களுடைய பேச்சால் சில வீண் விரோதங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்தொல்லை எல்லை
மீறாது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும்.
ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சூரியன் ராசியில் நீச்சபங்கமாக இருப்பதால் தந்தை வழியில்
நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு.
நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கையூட்டும்
சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வீரகள். ஆனால்
தொழிலில் காலூன்றுவீர்கள்.
1,2,3,8,9,10,24,25
ஆகிய நாட்களில் பணம் வரும். 26 -ம் தேதி இரவு 7.55 முதல் 29 -ம் தேதி அதிகாலை
1.41 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட
நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில்
இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

No comments :
Post a Comment