கைப்பேசி : +91 9768 99 8888
மாதத்தின்
முதல் இரண்டு வாரங்கள் வாக்கு ஸ்தானமான இரண்டில் செவ்வாய் அமர்வதால் பேச்சில் கவனமாக
இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்
உண்டு. வெகு நாட்களுக்கு பிறகு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். கையில் பணம் இல்லாமல்
இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள்.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் கேதுவுடன் ராசியில் இருப்பதால் புதிய
வாகனம் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும்.
பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. கலைஞர்களுக்கு இது நல்லகாலமாக அமையும். சிறு
கலைஞர்கள் பிரபலமாவற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு
செய்வதை ஒத்தி வைப்பது நல்லது.
கிரகநிலைகள்
சாதகமாக இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் உற்சாகத்துடனும், செயல் திறனுடனும் காணப்படுவீர்கள்.
பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை
ஊழியருக்கு இது நல்ல மாதமே. காவல்துறையினருக்கு திருப்பங்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு
அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம்
போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். தந்தையைப் பற்றியோ தந்தைவழி
உறவினர்கள் பற்றியோ கவலைகள் வரும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில்
அக்கறை வைக்க வேண்டும்.
1,2,3,7,10,11,16,17
ஆகிய நாட்களில் பணம் வரும். 24 -ம்தேதி மாலை 4.01 முதல் 26 -ம் தேதி இரவு 7.55 வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது
நல்லது. ஆயினும் சந்திரன் சுப நிலையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

No comments :
Post a Comment