Wednesday, November 1, 2023

விருச்சிகம்: 2023 நவம்பர் மாத ராசி பலன்கள்

விருச்சிகம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மாத முற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் பனிரெண்டாமிடத்தில் இருந்தாலும் குருவின் பார்வையில் நிலையில் இருப்பதால் இது விருச்சிகத்தினருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம்தான். பிற்பகுதி இரண்டு வாரங்களும் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெறுவது மிக மிக சிறப்பு. லாப ஸ்தானத்தில் சுக்கிரனும் இருப்பதால் நவம்பர் உங்களுக்கு கெடுதல்களை செய்யாது. உங்களில் சிலருக்கு தற்போது வேலை, தொழில், அமைப்புகளில் இருக்கும் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் இனி மாறி விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். வீட்டில் சுபகாரியம் உண்டு.

மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில், நீச்ச சுக்கிரனோடு இணைவில் இருக்கும் கேது நல்ல பலன்களைச் செய்வார் என்பதால் மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். சுபத்துவமான கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத் தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை தருவார். சூரியன், செவ்வாய் இணைவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். குடும்பத்தில் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

சிலருக்கு முதல் திருமண தொடர்புகளின் மூலம் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும் இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல கடந்த சில வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் இனிமேல் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அறிமுகமற்றவர்களை எதிலும் நம்பி விடாதீர்கள். புதிய நண்பர்களால் பிரச்னைகள் வரும். கவனம்.

1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 1-ம் தேதி மாலை 4.11 முதல் 4-ம் தேதி அதிகாலை 1.23 வரையும், மாத இறுதியில் 29-ம் தேதி அதிகாலை 1.41 முதல் டிசம்பர் 1-ம் தேதி காலை 10.12 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment