Tuesday, November 28, 2023

மிதுனம்: 2023 டிசம்பர் மாத ராசி பலன்கள்

மிதுனம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள், ராசிநாதன் புதன் ஏழில் அமர்ந்து, ராசியைப் பார்க்கும் நிலையில், அவரை குருவும் பார்ப்பதால், மிதுனத்திற்கு தொட்டது துலங்கும் மாதம் இது. தொட்டது துலங்கும் என்கின்ற வார்த்தையினை வெகுகாலமாக நான் மிதுன ராசிக்கு எழுதவில்லை என்பதை இங்கே நினைவு படுத்துகிறேன். யோகாதிபதி சனியும், ஐந்துக்குடைய சுக்கிரனும் ஆட்சி வலிமை பெறுவதால் மிதுன ராசியின் முன்னேற்றங்கள் ஆரம்பிக்க இருக்கும் மாதம் இது.

இதுவரை நடந்த எதிர்மறை பலன்கள் யாவும் விலகிக் கொண்டிருப்பதை இனி நீங்கள் உணர முடியும். இனிமேல் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும். 11 ல் குரு அமர்ந்து, ஏழாமிடத்தை பார்ப்பதால் உங்களில் சிலருக்கு சுப காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகள் உண்டு. சிலர் திருமணம் நடக்கப் பெறுவீர்கள். அல்லது வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும் நிகழ்ச்சியாவது இந்தமாதம்  இருக்கும். சுக்கிரனும் சனியும் ஆட்சி வலுவுடன் இருப்பது தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளுக்கு நல்ல பலனை அளிக்கும். கேது வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் அவற்றை முடிப்பீர்கள்.

செவ்வாய் ஆறாமிடத்தில் ஆட்சி வலுப் பெறுவதால் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வரத் துவங்கும். ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். இளைய பருவ மிதுன  ராசிக்காரர்கள் கடந்த வருடம் வரை அஷ்டமச் சனியால் கடுமையான  கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள். இனி நீங்கள் கலங்கத் தேவையில்லை. இனிமேல் அனைத்தும் நன்றாகவே நடக்கும். மிதுனத்திற்கு இனிமேல் வளர்பிறை காலம். ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் சாதிக்க வேண்டும் என்ற முயற்சிகளில் இருப்பவர்களுக்கு. இந்த மாதமே அதற்கான. முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கும். இனிமேல் எதிலும். சந்தோஷம் மட்டுமே உங்களுக்கு உண்டு. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். 2024-ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம். 

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 15ம் தேதி மதியம் 1:44 முதல் 17-ம் தேதி மாலை 3:44 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment