கைப்பேசி : +91 9768 99 8888
உங்களில் சிலர் வேலை விஷயமாக வடக்கு திசை நோக்கி போவீர்கள். கடகத்திற்கு துயரங்கள் எதுவும் இல்லாத மாதம் இது. இளைஞர்களுக்கு சில முற்றுப்பெறாத அனுபவங்கள் கிடைக்கும். அஷ்டமச் சனி நடப்பதால் உங்களில் சிலர் தேவையற்ற பழக்கங்களை இந்த மாதம் கற்றுக் கொள்வீர்கள். உங்களை திசை திருப்பக்கூடிய நட்புகள் அறிமுகமாகும் மாதம் இது. எதிலும் அக்கறையும் கவனமும் தேவை. யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதால் தொழில் அமைப்புகளில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.
இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. சிலருக்கு பார்த்து வந்த வேலையில் மாற்றம் அல்லது வேறு கம்பெனி மாற்றம் இருக்கும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு நிச்சய மாற்றம் உண்டு. இப்போது வரும் மாற்றம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதால் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வது நல்லது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. வரும் புத்தாண்டு உங்களுக்கு கொடுக்க இருக்கும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் மாதமாக இந்த டிசம்பர் இருக்கும். நடுத்தர வயதினருக்கு எவ்வித தொல்லைகளும் வேலை தொழில் அமைப்புகளில் இருக்காது.
1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம் தேதி மதியம் 3:44 முதல். 19ம் தேதி மாலை 6:21 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

No comments :
Post a Comment