Wednesday, August 30, 2023

விருச்சிகம்: 2023 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

விருச்சிகம்:

வெற்றி ஸ்தானங்களான 6, 11 ஆம் இடங்களில் யோகாதிபதி குருவும், ராசிநாதன் செவ்வாயும் இருப்பது விருச்சிக ராசிக்கு நன்மை தரும் அமைப்பு என்பதால் செப்டெம்பர்  மாதம் உங்களுக்கு யோக மாதம்தான். வேலை, தொழில் அமைப்பில் எவ்வித சிக்கல்களும் வரப் போவது இல்லை. சுக்கிரனும் வலுப் பெறுவதால் இந்த மாதம் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும். சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், யூடியூப். இன்ஸ்டாக்ராம் போன்றவைகளில் இப்போது உங்களுக்கு பெயரும், புகழும், பணமும் கிடைக்கும்.

சூரியன் வலுவாக இருப்பதால் எதிர்பாராத பண வரவு மாதம் இருக்கும். யார் வீட்டுப் பணமானாலும் பாக்கெட்டில் புரண்டு கொண்டே இருக்கும். பணத் தட்டுப்பாடு இருக்காது. வேலை தொழில் விஷயங்களில் இருந்து வந்த கலக்கமான, பதட்டமான சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தந்தைவழி தொழில் செய்பவர்கள் போன்றவருக்கு இந்த மாதம் மிகுந்த நன்மைகள் தரும். இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்

குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். இளைஞர்களுக்கு பெண் சினேகிதிகள் மூலம் உல்லாச அனுபவங்கள் உண்டு. சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு  சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.

1,2,3,5,7,12,13,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 7 -ந்தேதி இரவு 11:12 மணி முதல் 10 -ந்தேதி காலை 10:25 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.   

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment