Wednesday, August 30, 2023

தனுசு: 2023 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு:

தனுசுக்கு இப்போது கிரகநிலைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. ராசியை குரு வலுப் பெற்றுப் பார்க்கிறார். வேலை, தொழில், வியாபார எதிர்ப்புகளை ஜெயிக்க செவ்வாய் பத்தில் இருக்கிறார். இது போன்ற நல்ல சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வரும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். தனாதிபதி சனி மூன்றில் ஆட்சி பலம் பெறுவதால் மாதம் முழுவதும் சரளமான பணப்புழக்கம் இருக்கும். எந்தப் பிரச்னையும் எல்லை மீறாது. அனைத்தையும் சமாளிக்க முடியும். குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம் என்று சொல்லுவேன். ராசிக்கு குருவின் பார்வை இருப்பது கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன் கலக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தரும் மாதம் இது.  

தனுசு ராசிக்கு இது மகிழ்வும் நிறைவும் உள்ள மாதமாக இருக்கும். வீட்டிலும் வெளியிலும் சுபமான நிகழ்ச்சிகளும், மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். உங்களின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி விட்டன. உங்களில் சிலருக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனி இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்ல முடிவு இருக்கும். சண்டை சச்சரவுகள் நீங்கும்.

ஐந்துக்குடையவன் பத்தில் வலுப் பெறுவதால் பிள்ளைகள் விஷயத்தில் மனக்கவலைகள், விரயங்கள், சங்கடங்கள் இருந்தவர்களுக்கு அவர்கள் மூலம் நல்லவைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். தனுசு  ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்களின் ஜென்ம நட்சத்திர தினத்திலோ, அல்லது ஒரு செவ்வாய்க் கிழமையிலோ தமிழ்வேளாம் குமரக் கடவுளின் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மைகளை அதிகமாகத் தரும்.

1,2,4,5,6,11,18,19,20,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 10 -ந்தேதி காலை 10.25 மணி முதல் 12-ந்தேதி இரவு 11.01 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment