Wednesday, August 30, 2023

சிம்மம்: 2023 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

சிம்மம்:

சிம்மநாதன், சூரியன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் தன்னுடைய சொந்த வீட்டில் ஆட்சி நிலையில், குரு பார்வையில் இருப்பதாலும், மூன்றாவது, நான்காவது வாரத்தில் பணத்தை தரக்கூடிய தன வீட்டில் இருப்பதாலும், இது சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மைகள் தரும் மாதமாக இருக்கும். புத்தகம், கணக்கு, கம்ப்யூட்டர், பத்திரிக்கைத்துறை, அஞ்சல்துறை, வியாபாரிகள், பச்சைநிறம் சம்பந்தப்பட்டவர்கள், சொல்லி கொடுப்போர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் சிறந்த நல்ல பலன்களும், பணவரவுகளும் இருக்கும். வெகு நாட்களாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக இப்போது கிடைக்கும்.

ராசிநாதனின் வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். ஒரு சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். சிலர் உல்லாச பயணம் செல்ல முடியும். வெகு நாட்களாக ஆரோக்கியக்குறைவு இருந்து வந்தவர்கள் குணம் அடைவீர்கள். மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மூன்றில் கேது  சுபத்துவமாக இருப்பதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு. காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து கொள்ளாமல் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.  

2,4,6,8,9,10,17,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1ம் தேதி காலை 9:36 மணி முதல் 3ம் தேதி காலை 10:38 மணி வரையிலும், மாத பிற்பகுதியில், 28-ந்தேதி இரவு 8.28 மணி முதல் 30-ந்தேதி இரவு 9:08மணி வரையிலும் சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment