Saturday, September 3, 2022

மிதுனம்: 2022 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடியப் போகும் காலம் இது. மனதைத் தளர விடவேண்டாம். இந்த மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் எட்டாம் இடத்து சனி, சுக்கிரனின் பார்வையில் இருப்பதால், கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக நல்லவைகளே  நடக்காத உங்களுக்கு இனி பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான மாற்றங்கள் இருக்கும். மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் உச்சமாக உள்ளதோடு குருவின் பார்வையில் இருப்பதும் பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் கவசம் என்பதால் செப்டெம்பர் மாதத்தில் இருந்து நிம்மதியாக உணருவீர்கள். அனைத்தும் இனி நல்லதாய் நடக்கும்.

அஷ்டமச்சனி நடப்பதால் சொல்லை காப்பாற்றுவது கடினமாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்கும் உதவி செய்வதாகவோ பணம் தருவதாகவோ வாக்கு கொடுக்க வேண்டாம். நிறைவேற்றுவது கடினம். பொருளாதார நிலைமை கெடாது. பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் ராசிநாதனின் வலுவால் செப்டம்பர் மாதம் ஓரளவிற்கு வருமானம் வரும். எனவே எதையும் சமாளிக்கும் துணிவு வரும். அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்தே மிதுன ராசிக்காரர்கள் அனைவரின் பிரச்சனைகளும் தீரப் போகின்றன. குறிப்பாக குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் விலகப் போகிறது. குடும்பத் தலைவிகளுக்கு கணவராலும் குழந்தைகளாலும் இதுவரை இல்லாமல் இருந்து வந்த நிம்மதி கிடைக்கப் போகிறது. கணவர் உங்கள் சொல்லைக்  கேட்கப் போகிறார். குழந்தைகள் உங்களுக்கு ஏற்றார்போல நடக்கப் போகின்றன.  

தொழில் முனைவோருக்கு இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.  வியாபாரிகளுக்கு வியாபாரமும், லாபமும் பெருகும். வேலையில் நிம்மதி இல்லாமல் இருந்தவர்களுக்கு படிப்படியான நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. இந்த மாதம் வேலையே போனாலும் பரவாயில்லை, அதைவிட நல்ல வேலை கண்டிப்பாக கிடைக்கும். இன்னும் சில வாரங்களுக்கு ராசிநாதன் புதன் உச்ச நிலையிலேயே குருவின் பார்வையில் இருப்பார் என்பதால், கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மனத்துணிவு, தன்னம்பிக்கை அனைத்தும் இப்போது மிதுன ராசிக்காரர்களுக்கு வரும். எதையும் சமாளிப்பீர்கள். எல்லாம் இனிமேல் நன்றாக இருக்க போகிறது. அடுத்த வருடத்திலிருந்து சகஜமான நல்ல வாழ்க்கைக்கு நீங்கள் வரப் போகிறீர்கள்.  அதற்கான ஆரம்ப அடிப்படை விஷயங்கள் இந்த மாதத்திலேயே நடக்கும். கவலை வேண்டாம்.

3,5,7,8,9,12,13,14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ந்தேதி இரவு 11.38 மணி முதல் 9-ந் தேதி அதிகாலை 12.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருப்பது நல்லது. எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சண்டை வந்தாலும் ஒதுங்கி போவது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment