Saturday, September 3, 2022

மேஷம்: 2022 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

செப்டம்பர் மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் சுபத்துவமாக நல்ல நிலையில் இருப்பதாலும், ராசியின் மற்ற யோகர்களான சூரியனும், குருவும் வலிமையாக இருப்பதாலும் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறுகின்ற, முயற்சிகள் பலிக்கின்ற மாதம் இது. முப்பது வயதுகளில் இருக்கக்கூடிய இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில் அமைப்புகளில் முன்னேற்றம் ஏற்படுகின்ற மாதமாகவும் இது அமையும். இதுவரை நல்ல வேலை இல்லையே என்ற எண்ணங்களில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்ததை விட நல்ல வேலை அமையும். சமீபத்தில் இன்டர்வியூக்கு சென்று வந்தவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். பணியிடங்களில் மன அழுத்தத்துடன் இருந்தவர்கள் மாற்றம் பெறுவீர்கள்.

பனிரெண்டில் உள்ள குருவின் ஆட்சி நிலையால் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு சென்று படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் விரும்பியவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும். உங்களை நம்பாத பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். இளைய பருவத்தினருக்கு இந்த மாத இறுதியில் திருமணம் நடப்பதற்கான பெண் பார்த்தல், மாப்பிள்ளை பார்த்தல் போன்றவைகள் இந்த மாதம் உண்டு. கஷ்டங்கள் விலகும் மாதம் இது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும்.

உங்களில் பலருக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். வியாபாரிகளுக்கு மந்த நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். இதுவரை வராமல் இருந்த பாக்கி இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும். இளைஞர்களின் மனம் சந்தோஷப் படும்படியான நிகழ்ச்சிகளும் உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகள் வரும். அரசியல்வாதிகளுக்கு பதவி உண்டு. நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்வகையில் இருந்து வந்த மனக்கசப்புக்கள், பூர்வீகச் சொத்து விஷயத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

1,2,3,4,12,13,14,16,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம் தேதி மாலை  5.55 முதல் 4-ம் தேதி இரவு 9.43 வரையும், மாத இறுதியில் 29-ந்தேதி இரவு 11.24 மணி முதல் 2-ந்தேதி அதிகாலை 3.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment