Saturday, September 3, 2022

ரிஷபம்: 2022 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் சுக்கிரன் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பகைராசியில் பகைவருடனும், இறுதிநாட்களில் நீச்ச நிலையிலும் இருக்கிறார்.  இது இந்த மாதம் பெரிய நன்மைகளையும், அதே நேரத்தில் கெடுதல்களையும் கொடுக்காத ஒரு அமைப்பு.  மாதம் முழுவதும் லாபஸ்தானத்தில் குருபகவான் வலிமையுடன் இருந்து 3,5,7ம் இடங்களைப் பார்ப்பது உங்களுக்கு எந்த நிலையிலும் மன தைரியத்தையும், அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கைத்துணை வழி நன்மைகளையும் கொடுக்கக்கூடிய அமைப்பு என்பதால் கவலைகளுக்கு இடமில்லாத மாதமாக செப்டம்பர் அமைந்திருக்கிறது.  

திருமணம் ஆகாத பருவ வயது ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது திருமண உறுதி நிகழ்வுகள், அல்லது திருமணம் ஆகக்கூடிய சூழ்நிலை உண்டு. இளைய பருவத்தினருக்கு வாழ்க்கை யாருடன் எந்த விதத்தில் எப்படி போகும் என்பதற்கான அடிப்படை அமைப்புகள், சில நல்ல அறிமுகங்கள் போன்றவைகள் கிடைக்கக்கூடிய மாற்றம் மிக்க மாதமாகவே இந்த செப்டம்பர் இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில் சுக்கிரன் நீச்ச நிலையில் இருந்தாலும், புதனுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோகத்தினை அடைந்து, குருவின் பார்வையில் இருப்பதால் இந்த மாதத்தின் இருபதாம் தேதிக்கு பிறகு உங்களுக்கு சில நல்ல மாற்றங்கள் இருக்கும். கடன் தொல்லைகள் இருந்தவர்களுக்கு அதிலிருந்து வெளியே வருவதற்கான, வருமானம் உண்டு. இதுவரை நிலைத்த வருமானம் இல்லையே என்ற எண்ணங்களில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலையான வருமானம் இனிமேல் இருக்கும்.

ஆறு, பன்னிரண்டாம் இடங்களில் ராகு, கேதுக்கள் இருப்பதால் எதிர்ப்புகளை அடக்க முடியும். பொறாமையின் காரணமாக உங்கள்மீது தொடர்ந்து தாக்குதல்களை கொடுத்து கொண்டிருப்பவர்களை மிகச் சுலபமாக சமாளிப்பீர்கள். குறிப்பிட்ட பலனாக யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அவரை பார்ப்பீர்கள். பிடிக்காத ஒருவருடன் இருந்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள். மாத பிற்பகுதியில் சின்ன விஷயத்திற்கு கூட எரிச்சல் அடைவீர்கள். எதிலும் நிதானமாக இருங்கள். சனியின் நிலையால் வீடு, குடும்பம், வேலை, தொழில் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாத மாறுதல்கள் இருக்கும். அந்த மாறுதல்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லவையாக அமையும். வருகின்ற மாறுதல்களை ஏற்று கொண்டு அதன்படி நடப்பது நல்லது. மாத பிற்பகுதியில் சுக்கிரன் நீச்சமாக இருப்பதால் கணவன் மனைவி உறவு சற்று அப்படி இப்படித்தான் இருக்கும். எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

2,3,4,10,14,15,16,21,23,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ந்தேதி இரவு 9.43 மணி முதல் 6-ந்தேதி இரவு 11.38 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment