Saturday, September 3, 2022

கடகம்: 2022 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கடகம்:

செப்டெம்பர் மாதம் முழுவதும் சகலத்தையும் கொடுக்க கூடிய பாக்யாதிபதி குரு ஆட்சி நிலையில் ஒன்பதாமிடத்தில் இருந்து தன்னுடைய புனித பார்வையால் ராசியை பார்த்து வலுப்படுத்திக் கொண்டிருப்பதும், ராஜயோகாதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் வலுவான நிலையில் அமர்ந்திருப்பதும் இந்த மாதம் கடக ராசிக்காரர்களுக்கு வயதிற்கு ஏற்றார் போல நல்ல பலன்கள் நடக்கும் என்பதைக் காட்டுகிறது. கோச்சார அமைப்புப்படி கிரகங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கின்றன. ஆனாலும் பிறந்த ஜாதக அமைப்பின்படி நல்ல தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு நற்பலன்கள் கூடுதலாக இருக்கும்.

கடகத்திற்கு இந்த மாதம் ஏற்றம் தரும் மாதம்தான். பணத்தை கொடுக்கக்கூடிய இரண்டாம் அதிபதியான சூரியன் மாதத்தின் முற்பகுதியில் மிகஅருமையாக உங்களுக்கு பொருளாதார மேன்மையை கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார். கடந்த ஆறு மாத காலமாக தொழில் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு கூட, புதனின் உச்ச நிலையால் நன்மைகள் இருக்கும். வெளியிடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொழில் போன்றவைகள் முன்னேற்றமாக இருக்கும். கடந்த காலங்களில் தேடிச் சென்று உதவி கேட்டும், உதவிகளை செய்ய மறுத்தவர்கள் அல்லது உதவிசெய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள் இப்பொழுது உங்களை தேடி வந்து நல்லவை செய்வார்கள். தனத்தையும் லாபத்தையும் குறிக்கக்கூடிய இரண்டு மற்றும் பதினோராம் இடங்கள் வலுவாக இருப்பதால் இந்த மாதம் பண வரவு சொல்லிக் கொள்ளக்கூடிய அளவிலேயே இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற கூலி இல்லையே என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு நல்லவை நடப்பது கண்ணுக்கு நேரே தெரியும்.

மிக முக்கிய பலனாக கடக ராசிக்காரர்களுக்கு இன்னும் நான்கு மாதங்களில் அஷ்டமச் சனி துவங்க இருப்பதால் புதிதாக தொழில் எதையும் ஆரம்பிக்க வேண்டாம் பெரிய முதலீடு செய்யும் தொழில் கூடவே கூடாது. இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதை மட்டும் கவனித்தாலே போதும். பண விஷயத்தில் யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக அதைச் செய்து விடலாம் இதை செய்துவிடலாம் என்று ஆசை காட்டுபவர்களிடம் ஒதுங்கியே இருங்கள். தேவைக்கு மட்டும் கடன் வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு கடன் வாங்க வேண்டாம். கிரெடிட் கார்டு இருப்பதை மறந்து விடுங்கள்.  இளைஞர்களுக்கு காதல் சரி வராது. இப்போது அறிமுகம் ஆகக்கூடிய நபர்கள் வரப்போகும் மாதங்களில் மன அழுத்தத்தை தரக் கூடியவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.

1,2,9,10,11,17,18,19,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ந்தேதி அதிகாலை 12.39 மணி முதல் 11-ந்தேதி இரவு 2.23 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்தநாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக கும்ப ராசிப் பெண்களிடம் விலகி இருக்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment