Saturday, September 3, 2022

சிம்மம்: 2022 செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

சிம்மம்:

மாதத்தின் முற்பகுதி இரண்டு வாரங்கள் சிம்மநாதன் சூரியன் ராசியிலேயே இருப்பது மிகச் சிறப்பு. பிற்பகுதி இரண்டு வாரம் அவர் குருவின் பார்வையில் இருக்கிறார். அதோடு பணத்தை கொடுக்கக் கூடிய தன வீட்டில் தனாதிபதியோடு இருக்கிறார் என்பதால் இதுவரை பணத்தில் காரணமாக பிரச்சனைகளை அனுபவித்து வந்த, பொருளாதார பற்றாக்குறை நீண்டு கொண்டே இருந்த அத்தனை சிம்ம ராசிக்காரர்களுக்கும் நிம்மதிகள் கிடைக்கக்கூடிய நல்ல மாதமாக செப்டம்பர் மாதம் அமையும். கடன் தொல்லைகள் விலகப் போகின்றன. கடனை அடைப்பதற்குரிய நீடித்த வருமானம் வரக்கூடிய நிலைமை இப்பொழுது ஆரம்பிக்கும். வியாபாரம், தொழில், விவசாயம் போன்றவைகள் இனிமேல் நன்றாகவே இருக்கும். எந்த துறையில் இருக்கிறீர்களோ அந்த துறையை கைவிட வேண்டாம் என்கின்ற நம்பிக்கை பிறக்கக்கூடிய நல்ல மாதம் இது.

எட்டாமிடத்தில் குருபகவான் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து இரண்டு, பன்னிரண்டாம் இடங்களோடு தொடர்பு கொள்வதால், உங்களில் சிலருக்கு இப்பொழுது நீண்ட தூர பயணங்கள், வெளிநாடு, வெளிமாநில வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலமாக எதிர்காலம் சிறக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் இருக்கும்.  பத்தாம் இடத்தில் செவ்வாய் தசம அங்காரஹா என்ற அமைப்பில் இந்த மாதம் முழுவதும் நிலை கொண்டிருப்பதால் வேலை பற்றிய குழப்பங்கள் தீரும். இன்னும் நல்ல வேலை கிடைக்கவில்லையே என்ற எண்ணங்களில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் வரக்கூடிய மாதம் இது. ரியல் எஸ்டேட், கட்டிடம் சார்ந்த தொழில், மருத்துவர்கள், மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர்கள், நெருப்பு சார்ந்த தொழிலை செய்பவர்கள், டீக்கடை, பேக்கரி கடை நடத்துபவர்கள் போன்ற அனைத்து துறையினருக்கும் இந்த மாதம் முழுவதும் சீரான வருமானம் இருக்கும்.  

இளைய பருவத்தினருக்கு திருமணம் போன்ற அமைப்புகள் உறுதியாகும். வயது கடந்தும் இன்னும் செட்டில் ஆகவில்லையே போன்ற கவலைகளில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் மாதம் நிம்மதியைத் தரக்கூடிய, வாய்ப்புகள் வரக்கூடிய மாதமாக அமையும். சிம்மத்திற்கு இப்போது கிரகநிலைகள் நன்றாக இருக்கின்றன. நல்ல சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வந்து கதவை தட்டும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இப்போது நீங்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

1,2,4,5,6,11,18,19,20,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ந்தேதி இரவு 2.23  மணி முதல் 13-ந்தேதி காலை 6.36 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment