ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய நல்ல வாய்ப்புகள் உருவாகக்கூடிய அருமையான மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்திருக்கிறது. ராசிநாதன் புதன் தற்போது ராசியிலேயே உச்ச நிலையில் இருக்கிறார். இது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய நல்ல அமைப்பு. கூடுதலாக குரு ராசியையும், ராசிநாதனையும் பார்வையால் வலுப் படுத்தக்கூடிய நிலையில் இருப்பதால் செப்டம்பர் மாதம் முழுவதுமே உங்களுடைய மனம் உற்சாகமாக இருக்கக்கூடிய, எதிலும் நல்லவைகள் மட்டுமே நடக்கக்கூடிய மாதமாக இருக்கிறது. கன்னி ராசிக்காரர்களின் வயதுக்கு ஏற்றார்போல நற்பலன்கள் மட்டுமே நடக்கக்கூடிய யோக மாதமாக செப்டம்பரைச் சொல்லலாம்.
ராசிநாதன்
புதன் உச்சத்தில் இருப்பது இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால்
அடுத்தடுத்து கன்னிக்கு நல்லவைகள் மட்டுமே நடக்கப் போகின்றன. ஒன்று, ஏழாம் இடங்கள்
வலுத்திருப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறப் போகின்றன. புதிய வாழ்க்கை
உருவாகப்போகிறது. திருமணம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் நினைத்தவை நடக்கப்போகிறது.
பெற்றோர்களும், மற்றவர்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறார்கள். வேலை
இடங்களில் இருந்து வந்த சங்கடங்கள் விலகப் போகின்றன. தொழில் சிறக்க போகிறது. ஏன்டா, இந்த வியாபாரத்தை
செய்து கொண்டிருக்கிறோம் என்பது போன்ற மனநிலையில் இருந்தவர்களுக்கு நல்ல
மாற்றங்கள் உருவாகப் போகின்றன. இளைய பருவத்தினருக்கு அடுத்த சில வருடங்களுக்கு
எப்படி, யாருடன், எவ்விதம் இருக்கப் போகிறீர்கள் என்பதற்கான நல்ல அறிமுகங்கள்,
அடிப்படை விஷயங்கள் நடக்கப் போகின்றன.
எல்லா
துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்ற மாதம் இது இதுவரை இருந்துவந்த எதிர்மறை
எண்ணங்கள் விலகும். பிறந்த ஜாதக தசாபுக்தி அடிப்படையில் கெடுதல்கள் நடந்து கொண்டு
இருப்பவர்களுக்கு கூட ராசிநாதனின் வலுவால் அனைத்தையும் சமாளிக்கும் தைரியமும்
திறமையும் உண்டாகப் போகிறது. எதற்கும் கவலைப்பட வேண்டாம். குருவின் மூன்றாமிட
பார்வையால் முயற்சிகள் அத்தனையும் பலிக்கும். கிரகங்கள் தருகின்ற இந்த நல்ல
அமைப்பினை உங்களுடைய விடாமுயற்சியின் மூலம் மிகப்பெரிய வெற்றியாக மாற்றிக்
கொள்வீர்கள் என்பதால் கன்னி ராசிக்காரர்கள் உழைப்பின் அருமையை உணர வேண்டிய
உன்னதமான மாதமிது. எல்லாம் கிடைக்கும், உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ப, என்பதுதான்
செப்டெம்பர் உங்களுக்கு சொல்லுகின்ற நல்ல செய்தியாக இருக்கும்.
7,8,9,10,11,15,16,17,25,26
ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ந்தேதி காலை 6.36 மணி முதல் 15-ந்தேதி மாலை 2.28
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில்
இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள் அவசரமான மாற்றங்கள் எதையும் மேற்கண்ட
நாட்களில் செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment