ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
துலாம்:
செப்டம்பர் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுமாரான மாதம்தான். அதே நேரத்தில் கெடுதலான எதுவும் உங்களுக்கு நடந்து விடப் போவது இல்லை. ஆறாமிடத்தில் குரு அமர்ந்து அந்த பாவகத்தை வலிமைப்படுத்தும் நேரத்தில், தூர இடங்களையும், விரயங்களையும், பங்குச்சந்தை லாபங்களையும் குறிக்கக்கூடிய பன்னிரண்டாம் பாவகத்தில் புதன் உச்சமாகி குருவின் பார்வையில் இருப்பதால், பிறந்த இடத்தை விட்டு வெளியே வந்து பிழைத்து கொண்டிருக்கின்ற துலாம் ராசிக்காரர்கள் அனைவருக்குமே இருக்கின்ற இடங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய நல்ல மாதமாக செப்டம்பர் அமைந்திருக்கிறது.
உங்களில்
சிலருக்கு கடந்த காலங்களில் யூகவணிகம் என்று சொல்லப்படக்கூடிய பங்குச் சந்தை
மற்றும் சூதாட்டம் போன்றவைகளால் ஏற்பட்டிருந்த நஷ்டங்கள் சரிக்கட்டப் படக்கூடிய
மாதமாக இது இருக்கும். சிலருக்கு தூர பயணங்கள் அமையும். அதன் மூலமான லாபங்கள் இருக்கும்.
குடும்பத்தில் சுப விஷயத்துக்காக செலவுகள் இருக்கும். பெண் குழந்தைகளுக்கான எதிர்கால முதலீடுகளை சிலர்
செய்வீர்கள். இதுவரை நடக்காத சுப விஷயங்கள் குடும்பத்தில் இருக்கும். கடந்த
காலங்களில் இருந்து வந்த வீண் விரயங்கள் தடுக்கப்படும். வயதானவர்களுக்கு இனி
மருத்துவச் செலவுகள் இருக்காது. மாதத்தின்
கடைசி 10 நாட்களில் ராசிநாதன் சுக்கிரன் நீச்ச நிலையை அடைந்தாலும் கூட புதனுடன்
இணைந்து நீச்சபங்க ராஜயோக அமைப்பில், குரு பார்வையில் இருப்பதால் கடன்களை
அடைப்பதற்கான வழி பிறக்கும்.
சிலருக்கு
புதிய கடன்கள் ஏற்படும். அதிக வட்டி தொல்லையிலிருந்து விலக முடியும். கடன் வாங்கி
வீட்டுக்கு ஏதேனும் ஒரு பொருள் வாங்குவீர்கள். வீடு, நிலம் முடிக்க முடியாமல் தடை
ஏற்பட்டிருந்தவர்களுக்கு தடை விலகும். கணவன் மனைவி உறவு சுமார்தான். ஆண்கள் எப்பொழுதும்
மனைவியை குறை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேரான
குடும்பத் தலைவியிடம் குடும்பத்தின் முழு பொறுப்பையும் விட்டுவிட்டால் இந்த மாதம் அனைத்தையும்
சமாளிக்கலாம். சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு
அதிகமாக இருக்கும். நீண்ட நாளாக தரிசிக்க நினைத்திருந்த புனிதத்தலங்களை தரிசிக்க
முடியும். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்
வியாபாரிகள் வேலைக்காரர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெண்களுக்கு
பணிபுரியும் இடங்களில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள்
உண்டு.
2,3,4,5,6,9,11,13,14,15
ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ந்தேதி மதியம் 2.28 மணி முதல் 18-ந்தேதி இரவு 1.43
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உங்களின் புதிய
முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும்
செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள்
ஆரம்பித்தல் போன்றவைகளையும் செய்யக்கூடாது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment