Saturday, September 3, 2022

விருச்சிகம்: 2022-செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

விருச்சிகம்:

யோகர்கள் அனைவரும் இந்த மாதம் முழுவதும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நற்பலன் மட்டுமே தரக்கூடிய அதிர்ஷ்ட அமைப்பில் இருக்கிறார்கள். ஐந்தாமிடத்திலிருந்து குரு, ஆட்சி வலிமையுடன் ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். சுக்கிரனின் வீட்டில் சுபத்துவமாகி ராசிநாதன் செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். வேலை, தொழில், வியாபாரத்தை நல்லபடியாக கொடுக்க கூடிய சூர்யன், தொழில் ஸ்தானத்திலும், லாப வீட்டிலும் மாதம் முழுவதும் இருப்பது, விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் எதையும் சாதிக்கக்கூடிய தகுதியோடு இருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. கடந்த சில வருடங்களாக சாதகமற்ற கோச்சார அமைப்பினால் கடுமையான பிரச்சனைகளில் இருந்து வந்த விருச்சிகத்தினர் அனைவருக்குமே வாழ்க்கை என்பது ஒரு வட்டம், மேலே இருப்பது கீழே வரும், கீழே இருப்பது மேலே போகும் என்பதை உணர்த்துகின்ற மாதமாக செப்டெம்பர் அமையும்.

விருச்சிகத்திற்கு இனி பெரிய கவலைகள் எதுவும் சில வருடங்களுக்காவது இல்லை. உங்களின் வயதுக்கு ஏற்ற வகையில் நற்பலன்கள் நடக்கக்கூடிய மாதம் இது. கிரகங்கள் நன்றாக இருக்கின்றன, எனவே எல்லாம் தானாக நடந்து விடும் என்று மட்டும் நினைத்துக் கொள்ளாமல், முயற்சிகளை நீங்கள் செவ்வனே செய்ய வேண்டியது கண்டிப்பாக அவசியம். முயற்சியை விட வருமானம் அதிகமாக இருக்கக்கூடிய மாதமாக இந்த மாதத்தை சொல்லலாம். ஏழாம் இடம் வலிமையாக இருப்பதால் இளைய பருவத்தினருக்கு திருமண வாழ்க்கை அமையப்போகிறது. கடந்த காலங்களில் வேலைக்கு செலக்ட் ஆகாதவர்கள் இந்த முறை நீங்கள் நினைத்த கம்பெனியிலேயே வேலை கிடைப்பதற்கான ஆரம்பங்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள்.  வெளிநாட்டு கனவுகள் பலிக்கப் போகின்றன. இதுவரை பணியிடங்களில் நல்ல பெயர் எடுக்காதவர்கள் இனிமேல் உங்களைப் போல் உண்டா என்பது போன்ற மதிப்புகளை பெறப் போகிறீர்கள். சிலரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகப் போகின்றன.  

பெண்களும், ஆண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளப் போகிறீர்கள். பிரபோசல் ஏற்றுக் கொள்ளப்படப் போகிறது. வாழ்க்கை இனிமேல் நல்ல விதமாக போகும் என்பதை மனம் உணரக்கூடிய யோக மாதம் இது. அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் விருச்சிக  ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை, குடும்பம், தொழில் போன்ற அனைத்திலும் செட்டில் ஆக வேண்டிய காலகட்டம். சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு.

5,6,7,11,12,13,19,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ந்தேதி அதிகாலை 1.43 மணி முதல் 20-ந்தேதி பகல் 2.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் பெரிய சங்கடங்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் ஆரம்பங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

3 comments :

  1. If you want an easy solution to get your love back, meet Expert Pandith Sairam.
    Best Astrologer in California

    ReplyDelete
  2. Best Indian astrologer Pandit Vijay Varma earned popularity internationally, famous astrologer in New York.
    Astrologer in USA

    ReplyDelete