ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
தனுசு:
மாதம் முழுவதும் தனுசு ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் குரு நான்காமிடத்தில் ஆட்சி நிலையில் இருக்கிறார். கேந்திர நிலையில் அவர் இருப்பது ஒருவிதத்தில் சாதகமற்ற தன்மைதான் என்றாலும் கூட, அவர் பத்தாம் இடத்தைப் பார்ப்பது வேலை, தொழில் விஷயங்களில் நல்ல பலன்களைச் செய்யும் என்பதால் தனுசு ராசிக்காரர்கள் எதையும் சமாளிக்கும் மாதமாக செப்டம்பர் இருக்கும். செவ்வாய் ஆறில் இருப்பதும், பாக்கியாதிபதி சூரியன் மாதம் முழுவதும் நல்ல நிலையில் இருப்பதும், எதுவும் கை மீறி போய் விடாது, கட்டுக்குள்ளேயே இருக்கும் என்பதை காட்டுகிறது.
தனுசு
ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள், விரயங்கள், அவமானங்கள், தொழில்
நிலைத்தன்மை இல்லாமை, வேலையில் சங்கடம், குடும்பத்தில் பிரச்சனை, நல்ல மணவாழ்க்கை
இல்லாமை போன்ற துன்பங்களை கொடுத்துக் கொண்டிருந்த கடந்த கால ஏழரைச்சனி இன்னும் சில
மாதங்களில் கடந்த காலமாகவே ஆகிவிடப் போவதால் வருங்காலம் வளமாக இருக்கும் என்பதை
மனம் உணரக்கூடிய நல்ல மாதம் இது. மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன்,
சுக்கிரனுடன் சேர்ந்து சுபத்துவமாகவும், பிற்பகுதி இரண்டு வாரங்கள் குருவின்
பார்வையிலும் இருப்பதால், அரசு சார்ந்த போட்டித் தேர்வுகள் எழுதிக்
கொண்டிருப்பவர்கள், கடந்த காலங்களில் வயதிற்கு ஏற்ற பாக்கியங்களை அனுபவிக்க
முடியாதவர்கள் அனைவருக்குமே இது வெற்றிகள் கிடைக்கக்கூடிய யோக மாதம்.
தந்தையிடம்
ஏதேனும் அனுமதியை கேட்பதற்கு இது நல்ல மாதமாகவும் அமையும். தந்தையால் சிறப்புக்கள் இருக்கும். சொந்த ஊரில் எதையும் செய்ய முடியாதவர்களுக்கு
இப்போது வாய்ப்புகள் வரும். பூர்வீகம்
நிலைக்கும். தந்தை வழி
சொத்துக்களால் பயன் இல்லாதவர்களுக்கு வழி பிறக்கிறது. தனுஷ் ராசிக்காரர்கள் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு
வழியில் இந்த மாதத்தில் இருந்து வேலை,
தொழில், வியாபாரம் போன்றவைகள் நிலைத்தன்மை அடையப்
போகின்றன. மாதமானால் இவ்வளவுதான் வருமானம் என்பது
தெரியவில்லையே என்பது போன்ற ஏற்ற, இறக்க குழப்பங்களில் இருந்தவர்களுக்கு ஒரு
நிலையான வருமானம் வரப்போகிறது. பிறந்த ஜாதக தசாபுக்தி அமைப்புகளின்படி கடுமையான
காலகட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும் கூட, கோச்சார நிலையில் ஓரளவிற்கு நல்ல
பலன்கள் மட்டுமே இருக்கக்கூடிய மாதம் இது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்
போங்கள். மனைவி பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. உங்கள்
கௌரவமும் பாழாகாது.
3,4,5,8,9,17,18,19,25,26
ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ந்தேதி பகல் 2.23 மணி முதல் 23-ந்தேதி அதிகாலை 2.03
மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம்
ஒரு நிலையில் இருக்காது என்பதால் சண்டையோ, வீண்
வாக்குவாதமோ செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Pandith Sairam, Best Indian Astrologer in New York, will assist you in handling all the matters deterring you.
ReplyDeleteBest Psychic in New York