Saturday, September 3, 2022

மகரம்: 2022-செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு நல்லவைகளுக்கான ஆரம்பங்கள் இருக்க கூடிய நல்ல மாதம் இது. தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கக் கூடிய மூன்றாம் பாவகத்தில் குரு வலுத்திருக்க, ஒன்பதில் பாக்கியாதிபதி உச்சம் அடைந்து குருவின் பார்வையில் இருப்பதால், இதுவரை கிடைக்காத பாக்கியங்கள் இனிமேல் மகர ராசிக்கு கிடைக்கப் போகின்றன.  இளைஞர்கள் புத்துணர்ச்சி பெற போகிறீர்கள். ஜன்மச் சனியின் ஆதிக்கம் இன்னும் சில வாரங்களில் முடியப் போவதால் எதிலும் நன்மை கிடைக்கும். கடந்த மூன்று வருடங்களாகவே கடுமையான துன்பங்களில் இருக்கின்ற மகர ராசிக்காரர்களுக்கு இப்போது விடியப்போகிறது. தூரத்தில் ஒளி தெரிகிறது. நம்பிக்கை மனதில் வரும்.  துன்பக் கடலில்தான் இன்னும் இருக்கிறீர்கள் என்றாலும் கூட, தூரத்தில் கரை தெரிகின்ற மாதமாக இது இருக்கும்.  மனதில் நம்பிக்கை வரும்.

இதுவரை செயல்படாத அதிர்ஷ்டம் இனிமேல் செயல்படப்போகிறது. உங்களில் சிலருக்கு எட்டாமிடம் கூடுதல் சுபத்துவத்தோடு இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் செயல்படக்கூடிய மாதம் இது. கடன் தொல்லைகள் விலகப் போகின்றன. இதுவரை கண்ணால் பார்க்க முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த பணத்தை கைநிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள். வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது என்ற நிலைமை இந்த மாதம் முதல் படிப்படியாக மாற இருக்கிறது. அதேநேரத்தில் உடனடியாக எதுவும் நடந்து விடாது. கெடுதல்கள் உடனே நடக்கும். நல்லவைகள் படிப்படியாகத்தான் நடக்க ஆரம்பிக்கும்.  அடுத்த வருட ஆரம்பத்திலேயே உங்களை தற்போது ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற ஜென்மச்சனி விலக இருப்பதால் இனிமேல் மகரம் சிகரத்தில் ஏறும்.

படிப்படியாக முன்னேற்றத்தை இனி நீங்கள் காண முடியும்.  கைநழுவி போன வாழ்க்கை கிடைக்கும். வேலை நிலைக்கும். விரயம் நிற்கும். தொழில் சிறக்கும். வாழ்க்கை அடையாளம் காட்டப்படும். செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். பிடிவாதம் ஒழியும். மனம் உற்சாகம் ஆகும். புத்துணர்ச்சி பிறக்கும். நல்லவைகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விட்டன. அடுத்த வருடம் கையில் கிடைக்க வேண்டியதுதான் பாக்கி. இனிமேல் வேலை, தொழில் அமைப்பில் எவ்வித சிக்கல்களும் வரப் போவது இல்லை. கஷ்டங்கள் அனைத்தும் முடிந்து விட்டது.மாத பிற்பகுதியில் சுக்கிரன் நீச்சபங்க வலுப் பெறுவதால் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும். சூரியன் வலுவாக புதனுடன் இருப்பதால் எதிர்பாராத பண வரவு இருக்கும். கலக்கமான, பதட்டமான சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. வழக்கு சாதகமாகும்.

1,2,3,5,7,12,13,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ந்தேதி அதிகாலை 2.03 மணி முதல் 25-ந்தேதி காலை 11.22 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. ராசிநாதன் வலிமை இழப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.   

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :