Monday, August 1, 2022

துலாம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

துலாம்:

ஆகஸ்ட் மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பது மற்றும் பத்தாம் இடங்களில் இருப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஒரு பலமான நிலையாக அமைகிறது. ராசிநாதன் வலுத்து இருந்தாலே எதையும் சாதிக்கலாம் என்பது ஒரு ஜோதிட விதி. அந்த அமைப்பில் தற்போது துலாம் இருக்கிறது. ராசியின் யோகர்கள் சுக்கிரன், சனி, புதன் மூவருமே நல்ல ஸ்தானங்களில் இருப்பது பருத்தி புடவையாய் காய்த்தது என்பது போல பலன் தரக்கூடிய ஒன்று. ஆகஸ்ட் மாதம் முழுவதுமே துலாம் ராசிக்காரர்கள் புத்துணர்ச்சியுடன், உங்களுடைய திறமைகள் மற்றவர்களுக்கு வெளிப்படுகின்ற விதமாக நன்கு செயல்படுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் பலிக்க கூடிய நல்ல மாதம் இது.  

பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பான தன்மைகள் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மகளிருக்கு, வீட்டிலும், அலுவலக இடங்களிலும் நிம்மதி இருக்கும். உங்களை தவறாக புரிந்துகொண்டு உங்களோடு முரண்பட்டு கொண்டிருக்கின்ற மேலதிகாரியை சுலபமாக கையாளுவீர்கள். ராசியில் கேது சுபத்தன்மையோடு இருப்பதால் சிலருக்கு ஆன்மிக அனுபவங்கள் ஏற்படும். வெகுநாட்களாக தரிசிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புனிதத்தலங்களை இப்போது தரிசிக்க முடியும். வயதான துலாம் ராசிக்காரர்கள் தீர்த்த யாத்திரை, புனித யாத்திரை, வடமாநிலங்களுக்கு திவ்யதரிசனம் செல்லுதல், கைலாச யாத்திரை போன்றவைகளுக்கு திட்டமிடுவீர்கள். இளைஞர்கள் உங்களை அழைத்துச் செல்ல சம்மதம் தருவார்கள்.  

ஏழில் ராகு ஓரளவிற்கு சுபத்தன்மையோடு இருப்பதால் இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமண ஏற்பாடுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழி பேசுகின்றவர்கள் நட்பு கிடைக்கும். சிலருக்கு இது போன்றவர்களிடம் காதல் வரும்.  ஏற்கனவே வேற்று மத அல்லது மொழி பேசுபவரை காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கின்ற மாதம் இது. பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். சிலருக்கு சுபச் செலவுகளும், விரயங்களும் இருக்கும். செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் வருமானமும் நன்றாக இருக்கும்.

3,8,9,10,16,17,18,19,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி காலை 6.06 மணி முதல் 21-ம் தேதி இரவு 6.09 மணி வரை  சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் மேற்கண்ட தினங்களில் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment