Monday, August 1, 2022

விருச்சிகம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

விருச்சிகம்:

விருச்சிகத்திற்கு அடுத்தடுத்து வெற்றிகளை தரக்கூடிய நிலையில் கிரக நிலைகள் அமைந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடுமையான கஷ்டங்களையும், மனஅழுத்தங்களையும், பொருளாதார பிரச்சனைகளையும், இழப்புகளையும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்கள் தற்போது அதிலிருந்து மெதுவாக வெளியே வந்து சகஜமான வாழ்க்கைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள். அதை இன்னும் மேம்படுத்தக்கூடிய அளவில் நீங்கள் வருங்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பதற்கு தேவையான அடிப்படை அம்சங்கள் உருவாகக்கூடிய நல்ல மாதமாக ஆகஸ்ட் இருக்கும்.  விருச்சிகத்திற்கு விடிந்துவிட்டது என்பதால் இனிமேல் கவலைகள் எதுவும் இல்லை.

 

இந்த மாதத்தின் பிற்பகுதியில் இருந்து ராசிநாதன் செவ்வாய் ராகுவிடம் இருந்து வெளியே வந்து ஏழாம் இடத்தில் அமர்ந்து சுபத்துவமாகி ராசியைப் பார்க்கப் போவதும், ஏற்கனவே ஐந்தாம் இடத்தில் குருபகவான் ஆட்சி வலுவுடன் அமர்ந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதும், விருச்சிகம் எதையும் சாதிக்கும் மற்றும் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஒன்று. மாத ஆரம்பத்தில் தர்மகர்மாதிபதி நிலையில் சூரியன் ஒன்பதாமிடத்தில் இருப்பதும், மாதத்தின் பிற்பகுதியில் அவரே தன்னுடைய வீட்டில் ஆட்சியாகி ஒன்பது, பத்தாம் இடங்கள் வலுவாக இருப்பதால், இதுவரை சரியாக தொழில் அமையாதவர்கள், தொழில் அமைந்தும் நஷ்டத்தில் இருப்பவர்கள், திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கின்ற தொழில், வியாபார அமைப்பு நன்கு இல்லாத விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருக்குமே இந்த மாதம் நல்லதொரு மாற்றம் நடந்து உங்களுக்கேற்ற ஜீவன விஷயங்கள் இருக்கும்.  

வெளிநாட்டை குறிக்கக்கூடிய எட்டாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து, எட்டாம் அதிபதி புதன் மாத பிற்பகுதியில் உச்சநிலையை அடையப் போவதால், வெளிநாட்டில்  படிக்க, மற்றும் வேலை செய்ய விரும்பியவர்களுக்கு அதற்கான அனுமதிகள் அல்லது சந்தர்ப்பங்கள் கிடைக்கும். எப்போதோ ஒருமுறை நன்றாக அமையும் கோட்சார கிரக நிலைகள் இப்போது உங்களுக்கு அமைந்திருக்கின்றன. ஆனாலும் பிறந்த ஜாதகப்படி நன்மை தரும் தசா, புக்திகள் அமையாத உங்களில் சிலர்  கஷ்டப்படுகிறீர்கள். ராசிப்படி பலன் சொல்வது இன்றைய கிரக நிலையான கோட்சார நிலையை கணித்து சொல்லப்படுவது. ஆனாலும் நீங்கள் பிறந்த ஜாதகத்தின்படி என்ன தசா, புக்திகள் நடக்கின்றன என்பது மிகவும் முக்கியம். தசா, புக்தி அமைப்பு சரியில்லை என்றாலும் ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

3,5,6,11,13,14,21,22,23,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி இரவு 6.09 மணி முதல் 24-ம் தேதி காலை 6.56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment