Monday, August 1, 2022

தனுசு: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

தனுசு:

மாதம் முழுவதும் ராசிநாதன் குரு ஆட்சி நிலையில் மிக வலுவான அமைப்பில் நான்காமிடத்தில் இருக்கிறார் ஆகவே இந்த மாதம் தனுசு ராசிக்காரர்கள்  எதையும் சமாளிப்பீர்கள். பண வரவும் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்களில் சிலருக்கு சென்ற மாதம் முழுவதும் கணவன் மனைவிக்குள் மனக் கஷ்டங்களும் போராட்டங்களும் இருந்தது. அது இப்போது தீரும். முக்கிய பலனாக சிலருக்கு தந்தையின் வழியில் மன வருத்தங்கள் மற்றும் செலவுகள் உண்டு. வயதான தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். பழைய கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை குரு வலுத்து பார்-ப்பதால் அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தாய் வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம். ஆகஸ்டு மாதம் தனுசுக்கு தொல்லைகள் எதுவும் தராமல் நன்மைகள் மட்டுமே இருக்கும் மாதம்தான்.

விட்ட குறை தொட்ட குறையாக சென்ற மாதம் போல ஈகோ பிரச்னையால் மாத பிற்பகுதில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள். எட்டாம் இடத்தை குழு வலுத்து பார்ப்பதால் உங்களில் சிலருக்கு பங்குச் சந்தையில் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இந்த மாதம் உண்டு

5,6,8,9,11,12,22,24,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் தேதி காலை 6.56 மணி முதல் 26-ம் தேதி மாலை 6.32 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment