Monday, August 1, 2022

மகரம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மகரம்:

ஜென்மச்சனியின் ஆதிக்கம் மெதுமெதுவாக மகர ராசிக்கு விலகி வருவதால் அடுத்த வருட ஆரம்பம் முதல் இனிமேல் மகர ராசிக்காரர்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள்,  மகரராசி இளைஞர்களுக்கு மாற்றத்தை தரக்கூடிய நிலையில் ஆகஸ்ட் மாதம் அமையும். வேலை இல்லை, வேலை இருந்தால் சம்பளம் இல்லை, சம்பளம் கிடைத்தால் நிம்மதி இல்லை, கடுமையான பிரஷர் இருக்கிறது என்பது போன்ற நிலையில், தொழில், வேலை அமைப்பில் மகரத்தினர் இருக்கிறீர்கள். சிலருக்கு சொந்த வாழ்க்கையில் எதுவும் நடக்காமல் சோகங்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக யார் நல்லவர், யார் கெட்டவர் என்பது புரிந்துவிட்டது. உறவை தெரிந்து கொண்டீர்கள். உண்மையானவர்கள் யார் என்பது தெரிந்து விட்டது.  பணம் என்றால் என்ன என்பதை சனி புரிய வைத்துவிட்டார். நண்பர்களைப் பற்றி அடி முதல் நுனி வரை இப்போது தெரியும். எல்லாம் நன்மைக்கே என்ற நிலையில்தான் தற்போது மகரத்தினர் இருக்க வேண்டும்,

அடுத்த வருடம் முதல் கண்டிப்பாக ஆனந்த வாழ்வு மகர ராசிக்காரர்களுக்கு வயதுக்கு ஏற்ற வகையில் அமைய இருப்பதால் இனிமே மகரத்தினர் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவை இல்லாத ஆரம்ப மாதமாக ஆகஸ்ட் இருக்கும். இனி எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். எதுவும் எல்லை மீறாது. கவலைப்படும்படி எதுவும் நடக்காது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த தயக்கமும், மெத்தனமும் விலகி சுறுசுறுப்பு அதிகமாகும் என்பதால் சாதனைகளைச் செய்ய நீங்கள் வரவேற்க வேண்டிய மாதம் இது. திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் உறுதியாகும். அதே நேரத்தில் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். மனைவியின் பொறுப்பில் எல்லாவற்றையும் விட்டு விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம்.

மகரத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் இனிமேல் கிடைக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

2,4,6,10,14,15,22,23,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம் தேதி மாலை 6.32 மணி முதல் 29-ம் தேதி அதிகாலை 4.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment