Monday, August 1, 2022

கும்பம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கும்பம்:

மாதத்தின் பெரும் பகுதி நாட்கள் யோகாதிபதி சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருப்பது இந்த மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு அப்படி ஒன்றும் கவலைகளை கொடுக்காத மாதமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பிற்பகுதியில் சுக்கிரன் ஆறாம் இடத்திற்கு மாறினாலும் விரயச்சனியாக இருக்கும் உங்களுடைய ராசிநாதன் சனிபகவானை பார்த்து சுபத்துவப்படுத்துவதால் சனியின் நல்லபலன்களும் இந்த மாதம் கும்பத்திற்கு கிடைக்கும்.  இன்னொரு யோகாதிபதி புதன் எட்டில் உச்சம் அடைவதால் இதுவரை வட மாநிலங்களுக்கு சென்று படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் அல்லது வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து வந்த கும்பத்தினரின் மனம் போலவே வாய்ப்புகள் கிடைக்க கூடிய நல்ல மாதம் இது.

அடுத்த வருடம் முதல் கும்பத்திற்கு ஜென்மசனி ஆரம்பிக்க இருப்பதால் இப்போதிலிருந்தே எதிலும் கும்பராசி நடுத்தர, இளைய வயதினர் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். 50 வயது கடந்தவர்களுக்கு ஜென்மச்சனி நல்ல பலன்களையே தரும். 40 வயதுகளில் இருப்பவர்களுக்கு ஜென்மச்சனி வேலை, தொழில் அமைப்புகளில் சங்கடங்களைத் தரும் என்பதால் இப்போதிலிருந்தே இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்படும் செயல்களில் கும்பத்தினர் ஈடுபட வேண்டாம்.  புதிதாக தொழில் ஆரம்பிப்பது கூடவே கூடாது. அடுத்தவர்களை நம்பி தொழிலில் இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகும். யாராவது வலுக்கட்டாயமாக உங்களை பங்குதாரராக சேர்க்க விரும்பினால் சேர வேண்டாம். பண விஷயத்தில் உறவுகளிடம் சரியாக இருங்கள். பணத்தால் உறவு விரோதமாக கூடிய தன்மைகள் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்க இருக்கிறது.  

வரும் முன் சொல்வது ஜோதிடம் என்பதால் கும்பத்தினர் தொழில் விஷயங்களில், வேலை மாற்றம் போன்றவைகளில் கவனமாக இருக்க வேண்டும். இளையவர்கள் வேலையில் மட்டும் கவனமாக இருங்கள். காதல் வேண்டவே வேண்டாம். இப்போது வருகின்ற காதல் அடுத்த வருடமோ, அதற்கடுத்த வருடமோ அழுகையில் போய் முடியும். உயிர் நண்பர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களிடம் சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அரசியல்வாதிகள் பேசும் போது கவனம் தேவை. கணவன் மனைவி அனுசரித்துப் போனால் குடும்பத்தில் அமைதி இருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.

1,2,4,10,11,12,21,24,25,28 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி இரவு 10.29 மணி முதல் 4-ம் தேதி காலை 6.39 மணி வரையும், மாத பிற்பகுதியில் 29-ம் தேதி அதிகாலை 4.15 மணி முதல், 31-ம் தேதி மதியம் 12.03 மணி வரையிலும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆயினும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment