Monday, August 1, 2022

மீனம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மீனம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் குருபகவான் ராசியிலேயே ஆட்சி நிலையில் இருப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு உண்மையில் இது நல்ல மாதம்தான். ஜென்ம குரு நல்லது செய்யாது என்பதற்கு, குருவே ராசிநாதனாக உங்களுக்கு அமைவதால் விதிவிலக்குகள் உண்டு. ஒரு சுப கிரகம் ராசியில் இருக்கும் பொழுது கண்டிப்பாக நன்மைகளையே செய்யும் என்பதன் அடிப்படையில் மீன ராசிக்காரர்கள்காரர்களுக்கு பெரிய தொல்லைகள் எதுவும் இப்போது இல்லை. அதைப்போலவே மாத பிற்பகுதியில் உங்களுடைய இரண்டாம் அதிபதியான செவ்வாயும் ராகுவின் இணைவில் இருந்து விலகி மூன்றில் அமர்ந்து ஒன்பதாம் வீட்டை தொடர்புகொள்வது மீனத்திற்கு அதிர்ஷ்டங்களை தரக்கூடிய நல்ல மாற்றம். மூன்றில் சுபத்துவமாக இருக்கும் செவ்வாய் உங்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம், புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடிய வகையில் செயல்படுவார். இந்த மாதம் நினைத்தது நடக்கும்.  கேட்டது கிடைக்கும்.  

மற்ற நட்பு கிரகங்களும் நல்ல நிலைமையில் இருப்பதால் ஆகஸ்ட் மாதம் மீனத்திற்கு ஆனந்த மாதம்தான். இன்னும் சில மாதங்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பது மீனத்திற்கு வியாபாரம், சுய தொழில் போன்றவைகளில் ஓரளவிற்கு நல்ல தன்மையை கொடுக்கக்கூடிய அமைப்பு. மாத பிற்பகுதியில் ஏழாம் அதிபதி புதன் உச்சத்தை அடைவதால் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதி நிகழ்வுகள் இருக்கும். ஏற்கனவே திருமணமாகி முதல் வாழ்க்கையை தொலைத்துவிட்டு இரண்டாவது வாழ்க்கையாவது நல்ல விதமாக அமையுமா என்பது போன்ற கலக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்ல இரண்டாவது வாழ்க்கைக்கான அறிமுகங்கள், அடிப்படை நிகழ்வுகள் நடக்கும்.  

குழந்தைகளைப் பற்றிய கவலைகள் தீரும். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். குழந்தைகள் உங்களிடம் நல்ல பெயர் எடுக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். அவர்களுடைய கல்வி, வேலை, திருமணம் போன்றவைகளில் இருந்த குறைகள் இந்த மாதம் நீங்கும். அவரவர்களின் வயதுக்கு தகுந்தபடி நல்ல விஷயங்கள் நடக்கும். குறிப்பாக இளைய பருவத்தினரின் ஆனந்த மாதம் இது. பருவத்திற்கேற்ப உல்லாசமாக இருப்பீர்கள். ஆணுக்கு, பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அறிமுகப்படுத்தும் மாதம் இது. எதிர்கால நன்மைக்கு தேவையான அத்தனையும் இப்போது கிடைக்கும்.

2,3,4,5,11,12,13,28,29,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி காலை 6.39 மணி முதல் 6-ம் தேதி பகல் 12.06 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட நாட்களில் நீண்ட பிரயாணங்களோ, புதிய முயற்சிகளோ செய்வதை தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment