கைப்பேசி : +91 9768 99 8888
கன்னி:
கன்னிக்கு எல்லாம் கிடைக்கின்ற மாதமிது. மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் பன்னிரண்டாம் இடமான விரைய ஸ்தானத்தில் இருந்தாலும் கூட, அவர் தனக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீட்டில் இருப்பது உங்களுக்கு சுபச்செலவுகள் மட்டும் உள்ள நிலைதான். இந்த மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு செலவுகள் இருந்தாலும் கூட அதற்கேற்ற வருமானம் வரும் என்பதுதான் உண்மை. மாதம் முழுவதும் ஏழாம் இடத்திலிருந்து குரு பகவான் தன்னுடைய சுப பார்வையால் ராசியைப் பார்த்து புனிதப்படுத்துவதால் எதையும் சமாளிப்பீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேறும். அவரவருடைய வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார்போல கன்னிராசிக்காரர்கள் நன்மைகளை மட்டுமே அனுபவிக்கக் கூடிய ஒரு நல்ல யோகமாதமாக ஆகஸ்ட் இருக்கும்.
மாதத்தின்
பிற்பகுதியில் ராசிநாதன் புதன் உச்ச நிலையை அடைகிறார். இந்த முறை அவர் சில
வாரங்கள் கூடுதலாக ராசியிலேயே உச்சமாக இருப்பார். ராசிநாதனின் வலுவால் அடுத்தடுத்து
வரக்கூடிய சில வாரங்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய
தன்மையில் இருக்கும். உங்களுடைய முயற்சிகளெல்லாம் பலிக்கக்கூடிய நல்ல மாதம் இது.
ஆனால் முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும் அவ்வளவுதான். இயல்பிலேயே
புத்திசாலிகளாகவும், அறிவால் எதையும் சாதித்துக் கொள்ளவும் கூடிய கன்னிராசிக்காரர்களுக்கு
இதுவரை இருந்து வந்த அத்தனை சவால்களும் சங்கடங்களும் தீரப்போகின்ற நல்லமாதமாக இது
இருக்கும்.
இதுவரை
உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள். பணி இடங்களில் நல்ல
பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கண்டிப்பாக வரும். சுயதொழில் செய்பவர்கள் இதுவரை இருந்து வந்த விரையங்கள்
விலகப் பெறுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு
இது நல்ல மாதம். மக்களிடையே நற்பெயரும், வருமானமும் இருக்கும். அடுத்த வருடம் நடக்க
இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலமாக ஆறாம் இடத்திற்கு சனி வரப்போவதால் அடுத்த
மூன்று வருடங்களுக்கு கன்னி நன்றாக இருப்பதற்கான
அடிப்படை, அஸ்திவார சம்பவங்கள் இனி இருக்கும். கணவன், மனைவி
உறவு நன்றாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பான முறையில் செய்து
முடிப்பீர்கள். அந்தஸ்து கௌரவம் உயர்வான நிலையில் இருக்கும். சமூகத்தில் பெரிய நிலையில்
இருப்பவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் மதகுருக்களின்
நேரடி ஆசிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு. பெண்களுக்கு இது
நல்லமாதம். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாரம்
என்பதில் சந்தேகம் இல்லை.
1,2,4,7,11,16,18,19,21,22
ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி இரவு 9.06 மணி முதல் 19-ம் தேதி காலை 6.06
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும்
செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment