கைப்பேசி : +91 8286 99 8888
கும்பம்:
கும்ப ராசி இளைஞர்களுக்கு தற்காலிகமாக அதிசார
நிலையில் ஜென்மச் சனி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக உங்களில் அவிட்டம், சதயம்
நட்சத்திர இளைஞர்கள் எதிர்காலம் பற்றிய கவலைகளில்
இருக்கிறீர்கள். பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பெரிய கஷ்டங்கள் எதுவுமின்றி
தடைகளை மட்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் திறமைக்கேற்ற வேலை, தொழில் அமையாத காலம் இது. இருக்கின்ற வேலையிலும் உங்களை புரிந்து
கொள்ளாதவர்கள் அதிகம் இருப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு அடுத்தவர் பெயரை வாங்கிக்
கொண்டு போகும் மாதம் இது. அதே நேரத்தில் கும்பத்தினர் எதிலும் பொறுமையாக இருந்து
காரியத்தை சாதிக்கும் குணம் உள்ளவர்கள் என்பதால் இறுதி வெற்றி உங்களுக்குத்தான்
என்பது உறுதியான ஒன்று.
கும்பம் சனியின் சொந்த ராசி என்பதால் மற்ற
ராசிக்காரர்களுக்கு தருகின்ற துன்பங்களை சனி ஒருபோதும் கும்பத்திற்கு தருவதில்லை.
ஏழரைச் சனியில் மற்ற ராசியினர் 100 சதவீத துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றால்
கும்பத்தினருக்கு 40 சதவீத சங்கடங்களை மட்டுமே சனி தருவார். அதேநேரத்தில்
பணக்கஷ்டம் வருவதற்கான சில அடிப்படைகள் இந்த மாதம் ஆரம்பிக்கும். எனவே
பணவிஷயத்தில் கும்பத்தினர் கவனமாக இருக்க வேண்டிய மாதமிது. இளைஞர்களுக்கு இந்த
வருடம் முழுவதும் பணம் என்றால் என்னவென்று புரிய வைக்கக் கூடிய நிகழ்வுகள் மட்டுமே
இப்போது நடக்கும்.
வேலை, தொழில் விஷயங்களில் அடுத்தவரை நம்பாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எதிலும் அகலக்கால் வைத்து விட வேண்டாம். எப்படிப்பட்டவராக இருந்தாலும் நம்பவே
வேண்டாம். இந்த காலகட்டத்தில் சனி,
பணத்தை இழக்க
வைத்து வாழ்க்கையை புரிய வைப்பார் என்பதால் காசு பணத்தில் கவனமாக இருக்க வேண்டிய
மாதமிது. சிலருக்கு இனம்புரியாத மனக்கலக்கங்களும் தவறாக ஏதாவது நடந்து விடுமோ
என்கிற பயஉணர்வும் இருக்கும். வரிவசூல் செய்யும் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை
கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். யோகாதிபதிகள் வலுவாக இருப்பதால் எந்தவிதமான
எதிர்மறை பலன்களும் நடைபெறாது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம்
இது.
6,8,9,10,20,21,22,27,28,29, ஆகிய நாட்களில் பணம் வரும். 12ம் தேதி அதிகாலை 1.32 மணி முதல் 14ம் தேதி காலை 6.12 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ
செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
.jpg)
No comments :
Post a Comment