ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மீனம்:
முயற்சிகளுக்கு பின்பு வெற்றிகளை
பெறுகின்ற அமைப்பு இந்த மாதம் மீனத்திற்கு இருக்கிறது. இளையபருவத்தினருக்கு வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் இப்போது
இருக்கும். அது யாரேனும் ஒருவரை சந்திப்பதாக இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை
மாற்றக்கூடிய ஒரு சம்பவம் நடக்க கூடிய அமைப்பாக இருக்கலாம். ராசிநாதன் குரு மாதம்
முழுவதும் வலிமையான அமைப்பில் ராசியிலேயே இருப்பதால் மீனத்தினர் அனைவரும்
தங்களுடைய வயதிற்கு ஏற்றார்போல நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
சிலர் இறை வழிபாட்டில் அதிகமாக ஈடுபாடு
கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மேமாதம் கெடுதலான
பலன்கள் நடக்கும் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்களில் சிலருக்கு இந்த மாதம்
எதிர்பாராத அதிர்ஷ்டம் ஒன்று நடக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவற்றில் லாபம் கிடைக்க இருக்கிறது. சிலருக்கு வீடு
விஷயத்தில் ஏமாற்றங்களும், வாகனச் செலவுகளும், வயதான தாயார் மூலமாக மனவருத்தம் மற்றும் மருத்துவச் செலவுகள் உண்டு. வீடு
கட்டிக் கொண்டிருப்பவர்கள் நல்ல காண்ட்ராக்டரிடம் ஒப்படையுங்கள். விரயங்கள் வரும்
அமைப்பு இருக்கிறது. இதுவரை தொழில் விஷயங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருந்து வரும் அதிர்ஷ்டமற்ற நிலைமைகள் மாறும்.
குறிப்பாக சொந்த வாழ்க்கையில் சென்ற வருடம் இழப்புகளை சந்தித்தவர்கள், இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாதவர்கள் மற்றும் திருமணம், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மே மாதம் சந்தோஷத்தை
தரும்.
பனிரெண்டாம் இடம் அசுபவலுப் பெறுவதால்
வீண்செலவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவு செய்வதற்கு தேவையான பணவரவும்
வருமானங்களும் கிடைக்கும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது.
சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். குருவின் வலுவால்
மனம் உற்சாகமாக இருக்கும். முகத்தில் புன்னகை தவழ காட்சி தருவீர்கள். வீட்டில் சுப
காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.
கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும்.
நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு.
2,5,11,19,20,21,22,24,25,28,30 ஆகிய
நாட்களில் பணம் வரும். 14 ம் தேதி காலை 6.12 மணி முதல் 16 ம் தேதி காலை 7.53 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
.jpg)
No comments :
Post a Comment