கைப்பேசி : +91 8286 99 8888
மகரம்:
கடந்த சில வருடங்களாகவே ஜென்மச்சனியின்
ஆதிக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மகர ராசிக்காரர்கள் அதிசார நிலையில் தற்காலிகமாக
சனி விலகுவதால், சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம். மகரத்தின்
மன உறுதி மேம்படும் மாதம் இது. மே மாதம் முழுவதும் அவயோக கிரகங்கள் கெடுதல்களைச்
செய்ய இயலாத நிலையில் இருப்பது சிறப்பு. வேலை, தொழில் அமைப்புகளில் நல்லபலன்களைத் தரக்கூடிய சுக்கிரன் மாத
பிற்பகுதியில் நல்ல நிலயில் அமரப் போவதால் இதுவரை தொழில் அமைப்பில் சிக்கல்களை
சந்தித்து கொண்டிருந்த மகரத்தினர் தொழில் சங்கடங்கள் தீருவதை இப்போது உணர
முடியும். குரு, சுக்கிரன் மூன்றில் இணைவதால்
சிலருக்கு மறைமுக விஷயங்களில் இருந்து பணவரவு இருக்கும். பணத்தின் காரணமாக பிரிந்த
ஒரு உறவோ அல்லது நட்போ மனம் மாறி மீண்டும் உங்களிடம் இணையும்.
முயற்சிகளுக்கு பின்பு வெற்றிகளை
பெறுகின்ற அமைப்பு இந்த மாதம் இளைஞர்களுக்கு இருக்கிறது. இளையபருவத்தினருக்கு வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் இப்போது
இருக்கும். அது யாரேனும் ஒருவரை சந்திப்பதாக இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை
மாற்றக்கூடிய ஒரு சம்பவம் நடக்க கூடிய அமைப்பாக இருக்கலாம். சுக்கிரன் மாதம்
முழுவதும் வலிமையான அமைப்பில் இருப்பதால் மகரத்தினர் அனைவரும் தங்களுடைய வயதிற்கு
ஏற்றார்போல நன்மைகளை அனுபவிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நன்றாக
இருக்கக்கூடிய சில மாற்றங்கள் இப்போது இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல
பலன்கள் நடைபெறும். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் சாதகமாக நடைபெறும்.
சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் ஆதரவும் தகுந்த நேரத்தில் உதவியும்
கிடைக்கும்.
ஈகோவினால் பிரிந்திருந்தவர்கள்
ஒன்றிணைவீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்ப சிக்கல்களுக்கு ஆளாகி
பிரிந்திருந்த கணவன்-மனைவியினர் உண்மை நிலையினை அறிந்து சேருகின்ற மாதம் இது.
பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம்
கிடைக்கும். வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும்.
2,5,6,10,15,19,20,26,27,28 ஆகிய
நாட்களில் பணம் வரும். 9 ம் தேதி மாலை 5.07 மணி முதல் 12 ம் தேதி அதிகாலை 1.32 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
.jpg)
No comments :
Post a Comment