கைப்பேசி : +91 8286 99 8888
விருச்சிகம்:
மாதம் முழுவதும் இருக்கும் கிரக நிலைகள் விருச்சிகத்திற்கு
யோகமாக இருக்கும் என்பதை காட்டுகின்றன. மாதம் முழுவதும் குருவின் பார்வை ராசிக்கு
இருப்பது நன்மைகளை தரக்கூடிய
அமைப்பு. ஆறில் ராகு, 12ல் கேது போன்ற கிரக நிலைகள் நன்மை தரும் என்பதால் முயற்சிகளை
மேற்கொண்டால் விருச்சிகத்தினர் இலட்சியத்தை அடையும் காலமாக இது இருக்கும்.
மாத பிற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய்க்கு
சனியின் தொடர்பு விலக உள்ளதால் இன்னும் இரண்டு வாரங்களில் உற்சாக நிலையை
அடைவீர்கள். உங்களில் சிலருக்கு வேலை செய்யும் இடங்களிலும் தொழில்
அமைப்புகளிலும் மறைமுகமான எதிரிகள்
உருவானாலும் அவர்களது முயற்சி பலிக்காது. வாழ்க்கை இப்போது முன்னேற்றப் பாதையில் இருக்கும்.
இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால்
முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். இதுவரை நல்லது நடக்க ஆரம்பிக்காத சிலருக்கு
கஷ்டங்கள் முடிவுக்கு வரும். வாழ்க்கையே இனிமேல் புதிய பாதையில் நல்ல விதமாக
செல்லத் துவங்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி
இருந்தவர்கள் தற்போது பக்கத்தில் வருவார்கள்.
உங்களில் திறமைக்கேற்ற வேலை
கிடைக்கவில்லையே என்ற மனக்குறையுடன் இருப்பவர்கள், விருப்பமில்லாமல் ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாற்றங்கள்
கிடைக்கின்ற மாதம் இது. சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு தூரம்
போக வேண்டி இருக்கும். சிலருக்கு வடக்கு திசை நோக்கிய பயணங்களும் அது சம்பந்தமான
லாபங்களும் இருக்கும். அம்மாவைப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று
பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது சிறப்புகளைச்
சேர்க்கும். நடுத்தர வயதில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த
எதிர்மறை எண்ணங்களும், சங்கடங்களும் விலகும். முக்கியமான
விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம்
நல்ல வழி தெரியக் கூடிய அளவிற்கு தீர்வுகள் தேடி வரும். இனி நடக்க இருக்கும் சில
மாற்றங்கள் உங்களுக்கு நன்மைகளைத் தர இருப்பதால் எதிலும் எதிர்மறையாக யோசிக்காமல்
நல்லவிதமாக செயல்பட்டு உயர்வுகளை பெறுங்கள்.
2,5,9,11,13,15,17,18,22,28,30 ஆகிய
நாட்களில் பணம் வரும். 4ம் தேதி பகல் 4.45 மணி முதல் 7ம் தேதி காலை 5.34 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment