கைப்பேசி : +91 8286 99 8888
மகரம்:
ஏப்ரல் மாதம் உங்களுக்கு சுமாரான மாதம்தான். வரும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மகரத்திற்கு எதையும் சந்திக்கக் கூடிய தைரியம் உண்டாகும். வருவது வரட்டும் பார்க்கலாம் என்ற தன்னம்பிக்கை வரும். ஜென்மச் சனியினால் மகரம் கடுமையான சோதனைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் தங்கம் சுடச் சுடத்தான் பொலிவு பெறும் என்பதைப் போல இந்த சோதனைகள் உங்களை பண்படுத்தி வெற்றி வீரனாக மாற்றும் என்பதே உண்மை.
இந்த மாத இறுதியில் சனி
அதிசார நிலையில் அடுத்த ராசிக்கு மாறுவதால் மகரத்தினர் இனிமேல் அனைத்து
சிக்கல்களில் இருந்தும் விடுபட தொடங்குவீர்கள். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம்தான்.
சோதனைகள் முடியப் போகிறது. உங்களில் சிலருக்கு இந்த மாதம் ஆன்மீக ஈடுபாடு அதிகமாக
இருக்கும். நீண்ட நாளாக தரிசிக்க நினைத்திருந்த புனிதத்தலங்களை இப்போது தரிசிக்க
முடியும். மகான்களின் ஆசி கிடைக்கும். சித்தர்கள் அடங்கிய ஜீவசமாதிக்கு சென்று வர
முடியும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. கணவன்
மனைவி உறவு சுமுகமாய் இருக்கும். வீடு வாகனம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
ஒருசிலர் இந்த மாதம் வாங்கவும் செய்வீர்கள்.
வேலை தொழில் வியாபாரம்
போன்றவைகளில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும். வியாபாரிகள் வேலைக்காரர்களை
நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் நல்ல
நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள் உண்டு. கணவர் உங்கள் பேச்சுக்கு
மதிப்பு கொடுப்பார். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும்.
பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரத் தொடங்கும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண்
செலவுகள் செய்யாதீர்கள். மாணவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், சுயதொழில்
செய்பவர்கள்,
விமான
நிலையங்களில் பணிபுரிபவர்கள், இன்ஜினியர்கள், ஏற்றுமதி
இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட துறையினருக்கு நல்ல பலன்கள் நடைபெறும். அருகில்
இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும்
நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிரமங்களை குறைக்கும்.
2,3,4,5,6,9,11,13,14,15
ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ந்தேதி காலை 8.34 மணி முதல் 14-ந்தேதி மதியம் 3.54
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உங்களின் புதிய
முயற்சிகள்,
ஆரம்பங்கள்
எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல்
போன்றவைகளையும் செய்யக்கூடாது.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment