Saturday, April 2, 2022

தனுசு:2022 ஏப்ரல் மாத ராசி பலன்கள்

 

#adityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

தனுசு:

மாத ஆரம்பத்தில் தனுசுநாதன் குருபகவான் ராசியின் எதிர்த்தன்மை உடைய கிரகமான சுக்கிரனுடன் மூன்றில் இருக்கிறார். ஆறுக்குடைய எதிரிக் கிரகம் வலுவாக இருப்பதால் மாதம் முழுதும் நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் நடக்கும். பிடிக்காத ஒருவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு போராட வேண்டியிருக்கும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களும் இப்போது நடக்கும். செய்யும் வேலையை விடவே விடாதீர்கள். தனுசுராசி இளைஞர்களுக்கு இப்போது போராட்ட காலம். எதுவும் முயற்சி செய்தால்தான் கிடைக்கும். சோம்பலின்றி சுறுசுறுப்பாக செயலாற்றினால் அனைத்தையும் ஜெயிக்கலாம் என்பது உறுதி.

ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர் அதிக வட்டி கட்டும் சூழலில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டு என்ற ஒன்று இருப்பதை மறந்து விடுவது நல்லது. சொல்லிக் கொடுக்கும் தொழில்புரிவோர், மார்க்கெட்டிங் போன்று பேச்சுத் திறமையால் வேலைசெய்பவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் போன்றவருக்கு பணியிடங்களில் நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால்  அனுசரித்து போவது நல்லது.

இந்த மாதம் ஒரு குறிப்பிட்ட பலனாக இரண்டில் சனி செவ்வாய் பாபத்துவமாக இணைந்திருப்பதால் ஒரு கருப்பு நிறமுள்ளவர் அல்லது காலை விந்தி விந்தி நடப்பவரால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை கடைப்பிடிப்பது நல்லது. மாத பிற்பகுதியில் குருபகவான் ஆட்சி நிலை பெறுவதால் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும்.

1,2,9,10,11,17,18,19,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ந்தேதி இரவு 9.51 மணி முதல் 12-ந்தேதி காலை 8.34 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக கடகராசிப் பெண்களிடம் விலகி இருக்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment