Saturday, April 2, 2022

கும்பம்:2022 ஏப்ரல் மாத ராசி பலன்கள்

 

#adityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

கும்பம்:

கும்பத்திற்கு கஷ்டங்கள் விலகும் மாதம் இது. பிரச்னைகள் எதுவும் இருக்காது. முக்கியமாக குரு இரண்டாமிடத்திற்கு மாறுவதால் பணப் பிரச்னைகள் இனிமேல் தீரும். வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும்.

வியாபாரிகளுக்கு மந்த நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். இதுவரை வராமல் இருந்த பாக்கி இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி வழி பிறக்கும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு தொகை வரும்.

விரையச் சனி நடப்பதால் குழந்தைகள் விஷயத்தில் செலவுகள் வரும். பெண் குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. பத்தாமிடம் வலுப் பெற்று இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் வரவுகளும் ஆதாயங்களும் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி வரும். நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்வகையில் மனக்கசப்புக்கள் அல்லது பூர்வீகச் சொத்து விஷயத்தில் இடையூறுகள் இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். சிரமங்கள் அனைத்தும்  தீரும் மாதம் இது.

5,6,7,11,12,13,19,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ந்தேதி மதியம் 3.54 மணி முதல் 16-ந்தேதி இரவு 8.01 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் பெரிய சங்கடங்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் ஆரம்பங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும். 

No comments :

Post a Comment