Saturday, April 2, 2022

மீனம்:2022 ஏப்ரல் மாத ராசி பலன்கள்

 

#adityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மீனம்:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் குரு தனக்கு எதிர்த்தன்மையுள்ள கிரகமான சுக்கிரனுடன் இணைந்து பனிரெண்டில் இருக்கிறார். அங்கே சுக்கிரன் வலுவாக இருப்பது மீன ராசிக்கு குழப்பம் தரும் ஒரு நிலைமைதான். இந்த மாத கிரக அமைப்பால் உங்களில் சிலர் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அவரை பார்ப்பீர்கள். பிடிக்காத ஒருவருடன் இருந்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள். மனம் கெடும் மாதம் இது.

மாத முற்பகுதியில் குருவும், சுக்கிரனும் விரையத்தில் இணைந்து மறைவதால் சின்ன விஷயத்திற்கு கூட நீங்கள் எரிச்சல் அடைவதற்கோ, தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு உங்கள் பெயரை கெடுத்து கொள்வதற்கோ வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். வீடு, குடும்பம், வேலை, தொழில் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாத மாறுதல்கள் இருக்கும். அந்த மாறுதல்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லவையாக அமையும்।  வருகின்ற மாறுதல்களை ஏற்று கொண்டு அதன்படி நடப்பது நல்லது. உங்களில் உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்களும் நிம்மதியைத் தரக்கூடிய விஷயங்களும் நடக்கும்.

முதலில் புதன் நீச்சமாகி பின் ராகுவுடன் இணைவதால் கணவன் மனைவி உறவு சற்று அப்படி இப்படித்தான் இருக்கும். எதிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல விஷயங்கள்தான் நடக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவதற்கோ, சம்பளம் தாமதம் ஆவதற்கோ வாய்ப்புக்கள் இருப்பதால் அனாவசிய செலவுகள் செய்யாமல் சிக்கனமாக இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு குறிப்பாக தொலைக்காட்சி துறையினருக்கு இது சிறந்த மாதம். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது.  சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம். மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிமும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம். என்னதான் குழப்பங்கள் இருந்தாலும் மாத பிற்பகுதியில் ராசிநாதன் குரு ராசிக்கு மாறி ஆட்சிநிலை பெறுவதால்  அனைத்துப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள்.

2,3,4,10,14,15,16,21,23,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ந்தேதி இரவு 8.01 மணி முதல் 18-ந்தேதி இரவு 10.08 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.  

No comments :

Post a Comment