கைப்பேசி : +91 8286 99 8888
கும்பம்:
ராசியில் குரு அமர்ந்து சுபத்துவப் படுத்துவதால் நீங்கள் தெளிவான மனதுடனும், முடிவெடுக்கும் திறனுடனும் இருக்கும் மாதம் இது. அதேநேரத்தில் சனி பனிரெண்டில் சூரியனுடன் இணைந்து, எரிச்சலாகி இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களில் சிலரின் வருமானங்கள் குறைந்து நிதிநிலைமை பாதிக்கப்பட்டாலும் தனகாரகனான குரு ராசியில் இருப்பதால் குறைகள் எதுவும் இருக்காது.
ஏழரைச்சனி நடப்பதால் உங்களில் சிலருக்கு அதிர்ஷ்டத் தடைகளும், வர வேண்டிய தொகை வராமல் இழுப்பதும், பிள்ளைகள் வழியில் மனச் சங்கடங்களும் இருக்கும். ராசியின் சுப வலுவால் எதையும்
சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் காலம் என்பதால்
எதிலும் அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு
மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி பறிக்கும் வேலைகள்
நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம் வரும் நிலையில் அதிக
கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார். வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது.
வம்பு வழக்கு வரும் காலம் இது.
2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம்தேதி இரவு 10.46 முதல் 21-ம் தேதி அதிகாலை 4.31 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment