கைப்பேசி : +91 8286 99 8888
மகரம்:
ராசிநாதன் சனியும், யோகாதிபதி புதனும் ராசியிலேயே இணைந்திருப்பதும், மாதம் முழுவதும் தொழில், லாபாதிபதிகள் சுக்கிரனும், செவ்வாயும் குருவின் வீட்டில் அமைவதும் மகரத்திற்கு சிறப்பான அமைப்பு என்பதால் பிப்ரவரி மாதம் உங்கள் வேதனைகளை விலக்கி முன்னேற்ற படிகளில் ஏற வைக்கும். அதே நேரத்தில் எட்டுக்குடைய சூரியன் 15 ம் தேதி வரை ராசியில் இருப்பதால் மாத முற்பகுதி வரை எதிலும் தடைகள் இருக்கும். கிணற்றில் போட்ட கல்லாக எதையும் உணருவீர்கள். மாத பிற்பகுதியில் அனைத்தும் சரியாகும்.
எல்லா வகையிலும்
சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைகளுக்கான அடிப்படைகள்
ஆரம்பமாகும் மாதம் இது. ஜென்மச் சனி நடந்து கொண்டிருந்தாலும் சனி வலுவாக இருப்பதால்
கடந்த வருடம் இருந்த துயரங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இருக்காது. இந்த மாதம் 17
ம் தேதி முதல் திருவோணம் நட்சத்திரத்தில் இருந்து சனி விலகுவதால் திருவோணக்காரர்களுக்கு
வருங்காலம் இனிமையாக இருக்கப் போகிறது. இனியெல்லாம் சுகம்தான். இனிமேல் உங்கள்
வாழ்க்கையில் கெடுதல்கள் எதுவும் இன்றி அனைத்தும் கையை மீறிப் போகாமல் உங்களின்
கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இளையவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த
பிரச்னைகள் இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும்
பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும்.
இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை.
4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி மதியம் 3.14 முதல் 18-ம் தேதி இரவு 10.46 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment