ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மீனம்:
மாதம் முழுவதும் ராஜ யோகாதிபதி செவ்வாய் பத்தாமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாக உள்ளதால் மீனத்திற்கு அதிர்ஷ்டம் ஆரம்பிக்கும் மாதம் இது. அதிர்ஷ்டமான வார்த்தைகளை எவ்வளவு வேண்டுமானாலும் இப்போது மீனத்திற்கு சொல்லலாம். நீங்கள் முயற்சிகளைச் செய்ய வேண்டும் அவ்வளவுதான். முன்னேற்றங்கள் ஆரம்பிக்க இருக்கும் மாதம் இது. பிறந்த ஜாதக தசா புக்தி அமைப்பினால் உங்களில் சிலருக்கு இதுவரை நடந்த எதிர்மறை பலன்கள் யாவும் விலகிக் கொண்டிருப்பதை இனி நீங்கள் உணர முடியும். இனிமேல் மீன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும். 2022-ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம்.
எனக்கு ஒன்றும்
சரியாக நடக்கவில்லையே என்று மனதிற்குள் குழம்பி கொண்டிருப்பவர்கள் கூட முயற்சிகளை
செய்து வெற்றி காணும் மாதம் இது. குருபகவான் பனிரண்டில்
இருப்பதால் உங்களில் சிலருக்கு சுப காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகள் உண்டு. சிலர்
திருமணம் நடக்கப் பெறுவீர்கள். அல்லது வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும்
நிகழ்ச்சியாவது இந்த மாதம் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று
கூடுவீர்கள். நீண்டநாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த மாதம் பார்த்து மனம்
மகிழ உரையாடுவீர்கள். புதிய வீடு வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை மேம்படுத்துவீர்கள்
புதிய நல்ல வாகனம் அமையும். வசதிக்குறைவான வீட்டில் இருப்பவர்கள் வசதியான
வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்குகள் உங்கள்
பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் கிட்டே வராது. எதிலும் வெற்றி
கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து உதவுவார்கள்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment