Thursday, August 26, 2021

தனுசு: 2021 செப்டம்பர் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடியப் போகும் காலம் இது. மனதைத் தளர விடவேண்டாம். மாத பிற்பகுதியில் நடக்க இருக்கும் அதிசார குருமாற்றம் ராசிநாதன் குரு சனியை சுபத்துவப் படுத்தப் போவதால் இனிமேல் ஏழரைச் சனியால் முழுமையாக  தொந்தரவுகள் இருக்காது. ஏழரைச்சனி அடுத்த வருடம் முழுமையாக விலகும் என்பதால் இந்த வருடத்தோடு உங்கள் பிரச்னைகள் அத்தனையும் ஒழியும். தனுசுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கும் மாதம் இது. இந்த மாதம் பாக்கியாதிபதி சூரியன் சுபத்தன்மை அடைவதால் தொழில் மூலம் வருமானங்கள் இருக்கும். எனவே எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. செலவுக்கேற்ற பணவரவு இருக்கும். கவலைப்படத் தேவையில்லாத மாதம் இது.

யோகாதிபதி செவ்வாய் பத்தாமிடத்தில் இருப்பதும், தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதும்  பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் கவசம் என்பதால் செப்டெம்பர் மாதத்தில் இருந்து சற்று நிம்மதியாக உணருவீர்கள். இரண்டாம் வீட்டிற்கு எந்தவித சுபர் சம்பந்தமும் இல்லாமல் இருந்த நிலைமாறி இன்னும் சில நாட்களில் குரு இரண்டில் அமரப் போவதால் அனைத்தும் இனி நல்லதாய் நடக்கும். வாக்கில் சனி இருப்பதால் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினமாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்கும் உதவி செய்வதாகவோ பணம் தருவதாகவோ வாக்கு கொடுக்க வேண்டாம். நிறைவேற்றுவது கடினம். பொருளாதார நிலைமை கெடாது. பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் இனிமேல் தனுசு ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் துணிவு வரும் 

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது.

1,2,3,4,12,13,14,16,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 3-ம் தேதி காலை  10.19 முதல் 5-ம் தேதி மாலை 6.07 வரையும், மாத இறுதியில் 30-ந்தேதி இரவு 7.05 மணி முதல் 3-ந்தேதி அதிகாலை 3.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment