கைப்பேசி : +91 8286 99 8888
விருச்சிகம்:
செப்டம்பர் மாதம் பாதிநாள் வரை ஜீவனாதிபதி சூரியன் ஆட்சி பெற்ற நிலையிலும், அதன்பின் அவரது நண்பரான உச்சபுதனுடன் இணைந்தும் இருக்கிறார். ராசிநாதன் செவ்வாயும் உச்சனின் வீட்டுல் லாப ஸ்தானத்தில் வலுவாக இருப்பதால் உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும் சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதுத் தொழில் தொடங்கலாம். செய்யும் தொழில் சிறப்பாக நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். மாத முற்பகுதியில் நான்கில் குரு இருப்பதால் வீடு, வாகனம், தாயார் போன்ற விஷயங்களில் நன்மைகள் நடக்கும்.
கணவன்
மனைவி உறவு சிறப்பாக இருக்கும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை
மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை
விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு
நல்ல பணவரவு இருக்கும். உங்களில் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால்
இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார
அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். வெகுநாட்கள்
திருமணம் தாமதமான குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும். செப்டெம்பர் மாதம்
சிலருக்கு திருப்பங்களைக் கொடுக்கும் என்பதால் இந்த மாதம் நல்ல மாதமே.
1,4,5,6,7,8,20,21,22,28,29
ஆகிய நாட்களில் பணம் வரும். 28-ந்தேதி காலை 7.14 மணி முதல் 30-ந்தேதி இரவு 7.05
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல் எதுவும் நடக்காது. இருந்தாலும்
நீண்ட தூர பிரயாணங்கள் புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எதுவும் எடுத்தல் போன்றவைகளை
செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

No comments :
Post a Comment