கைப்பேசி : +91 8286 99 8888
துலாம்:
துலா நாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் தனது நீச்ச ஸ்தானத்திலும், பிறகு ராசியில் ஆட்சி நிலையிலும் இருக்கப் போவதால் இது துலாமிற்கு நன்மைகள் தரும் மாதமாக இருக்கும். ஒரு சிறப்புபலனாக இனிமேல் கிடைக்காது என்று கை விட்ட ஒரு தொகையோ, ஒரு பொருளோ இன்ப அதிர்ச்சியாக துலாமுக்கு இப்போது கிடைக்கும். பிரிந்து போன ஒருவர் இப்போது சேருவார். ராசிநாதனின் ஆட்சி வலுவால் உங்கள் தைரியம் பளிச்சிடும். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழடைவீர்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். உல்லாச பயணம் செல்ல முடியும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் குணமடைவீர்கள். மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனி விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும்.
யோகக்கிரகங்கள்
வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண
ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இளைய பருவத்தினரை
பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வீண்
வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக காதல்
விவகாரத்தில் பெற்றோர்களின் மனம் வருந்தும்படியான நிகழ்வுகளை இளையோர் செய்வார்கள்.
தந்தை வழி உறவினருடன் உரசல்கள் வருவதற்கு
வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயத்திற்கு
கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

No comments :
Post a Comment