Thursday, August 26, 2021

மகரம்: 2021 செப்டம்பர் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மகரம்:

மாத முற்பகுதியில் ராஜயோகாதிபதி சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும் நீச்சபங்க நிலையில் இருப்பதால், இந்த மாதம் முழுதும் மகரத்திற்கு நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் நடக்கும். ஒரு குறிப்பிட்ட நிலையாக உங்களுக்குப் பிடிக்காத ஒருவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு நீங்கள் போராட வேண்டியிருக்கும். பிடிக்காத விஷயங்களும் இப்போது நடக்கும். இளைய பருவத்தினர் தற்போது செய்யும் வேலையை விடவே விடாதீர்கள். ஆனால் ஜென்மச் சனி விட வைத்து விடுவார். மகர ராசி இளைஞர்களுக்கு இப்போது போராட்ட காலம். எதுவும் முயற்சி செய்தால்தான் கிடைக்கும். சோம்பலின்றி சுறுசுறுப்பாக செயலாற்றினால் அனைத்தையும் ஜெயிக்கலாம் என்பது உறுதி.

ஆறுக்குடையவன் ஒன்பதில் வலுப்பெறுவதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர் அதிக வட்டி கட்டும் சூழலில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டு என்ற ஒன்று இருப்பதை மறந்து விடுவது நல்லது. சொல்லிக் கொடுக்கும் தொழில்புரிவோர், மார்க்கெட்டிங் போன்று பேச்சுத் திறமையால் வேலைசெய்பவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் போன்றவருக்கு பணியிடங்களில் நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால்  அனுசரித்து போவது நல்லது.

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வாக்குவாதத்தை தவிருங்கள். இளைய பருவத்தினர் ஜென்மச்சனி காலத்தில்தான் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் என்பதால் காதல், கீதல் என்று உங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்தினால் வானம் உங்கள் வசப்படும். இளைஞர்களுக்கு தற்போது எதிர்கால மாற்றங்களுக்கான அமைப்புகள் நடந்து கொண்டிருக்கும். உங்களில் பலர் எதிர்கால வாழ்க்கை அமைப்பிற்கான நிகழ்வுகளை சந்திப்பீர்கள். சனிக்குப் பரிகாரமாக பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வெள்ளிக்கிழமை சுக்கிரனை வழிபடுவதும் நன்மைகளை தரும்.

1,2,9,10,11,17,18,19,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ந்தேதி மாலை 6.07 மணி முதல் 7-ந்தேதி இரவு 10.49 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்தநாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக கடகராசிப் பெண்களிடம் விலகி இருக்கவும். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும். 

No comments :

Post a Comment